மனைவி தூங்க 6 மணிநேரம் விமானத்தில் நின்றபடியே வந்த கணவன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Report
31Shares

மனைவிக்காக விமானத்தில் சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணித்த கணவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் தினமும் பல நிகழ்வுகளும், சுவாரஷியங்களும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் மிகவும் வைரலாகி வருகிறது. பெரும்பாலும் அவை சினிமா நடிகர், நடிகையின் புகைப்படங்களாகவோ, அல்லது விலங்குகள், குழந்தைகள் சேட்டை செய்யும் புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ தான் இருக்கும்.

ஆனால் தற்போது வைரலாகியுள்ள புகைப்படம், மனிதநேயத்தையும், கணவன் - மனைவி இடையேயான காதலை சொல்லும் வகையில் அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த புகைப்படத்தில் ஒரு ஆண் விமானத்தில் நின்றபடி இருக்கிறார். அவருக்கு அருகில் ஒரு பெண் இருக்கையில் படுத்து உறங்குகிறார்.

இந்த புகைப்படத்தை கோர்ட்னி லீ ஜான்சன் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்த நபர் தனது மனைவி உறங்க வேண்டும் என்பதற்காக, 6 மணி நேரம் நின்றுகொண்டே விமானத்தில் பயணித்தார். இது தான் காதல்", என அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் சிலர் உறங்கும் அந்த பெண்ணை சுயநலவாதி என திட்டி தீர்க்கின்றனர். அவர் நினைத்திருந்தால், தனது கணவரின் தோள் மீது சாய்ந்துபடுத்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யாமல், தனது கணவரை நிற்க வைத்துவிட்டார் என சாடியுள்ளனர்.

1429 total views