நாய் கூண்டில் மகனை அடைத்த தந்தை; புகைப்படத்தால் பரபரப்பு

Report
232Shares

புகைப்படங்களை விவாகரத்து பெற்ற தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சீனாவின் Caitang பகுதியில் இருக்கும் Chao'an மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர், விவாகரத்து பெற்ற மனைவியை பழிவாங்க நினைத்துள்ளார்.

இதனால் தன்னுடைய வீட்டில் வளர்ந்து வந்த 20 மாத குழந்தையை நாய் அடைத்து வைக்கும் இரும்பு கூண்டிலில் அடைத்து புகைப்படமாக எடுத்து மனைவிக்கு அனுப்பியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் மனைவி உடனடியாக இது குறித்து பொலிஸில் புகார் செய்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டு தான் இந்த தம்பதிக்கு விவகாரத்து ஆகியுள்ளது. இருப்பினும் மனைவியின் மீது வெறுப்பில், குழந்தையை கூண்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார் என வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

6258 total views