மனைவியின் ஆபாச வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்!

Report
44Shares

ஆண்மை குறைபாடு சிகிச்சைக்கு பணம் கொடுக்க மறுத்ததால் மனைவியின் ஆபாச வீடியோவை, கணவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளமை தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரைச் சேர்ந்த 23 வயதான பிரஜா இவருக்கும் 26 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் பிரஜாவுக்கு ஆண்மை குறைபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அறிந்த அவருடைய மனைவி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறி கணவர் பிரஜா மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.

மாறாக பிரஜாவின் சகோதரர் மற்றும் நண்பருடன் உடலுறவில் ஈடுபடும்படி அவர்கள் அந்த பெண்ணிடம் வற்புறுத்தியுள்ளார். இதற்கு குறித்த பெண் மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த பிரஜா மற்றும் அவருடைய குடும்பத்தினர் உணவில் மயக்க மருந்து கலந்து குறித்த பெண்ணுக்கு கொடுத்து மயங்கிய பின்னர் குறித்த பெண்ணை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாக பிரஜாவின் ஆண்மை குறைபாட்டை சரிசெய்வதற்கான சிகிச்சைக்கு தந்தையிடம் இருந்து பணம் வாங்கி வரும்படி கூறி அவர்கள் அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்தனர். இதனால் மனம் உடைந்த அந்த பெண் தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரஜா மற்றும் அவருடைய குடும்பத்தினர் அந்த பெண்ணின் பேஸ்புக் பக்கத்தை முடக்கி, ஆபாச வீடியோ, படங்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

அத்துடன் அந்த பெண் விபச்சார தொழிலில் ஈடுப்பட்டுள்ளதாக கூறி பேஸ்புக் வழியாக பிறருக்கு அவர்கள் குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரியவந்துள்ளது.

இதுபற்றி அறிந்து மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளான குறித்த பெண் சைபர்கிரைம் பொலிஸில் புகார் செய்தார். அதன்பேரில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆபாச வீடியோ, படங்களை அழிக்கும் முயற்சியில் சைபர் கிரைம் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

2057 total views