விஜய் அஜித் ரசிகர்கள் போலவே மோதி கொண்ட இரு மாநில முதல்வர்கள்

Report
9Shares

விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள், அதிமுகவினர் மற்றும் திமுகவினர், ஆத்திகர்கள் மற்றும் நாத்திகர்கள் நடுவே டிவிட்டரில் சண்டை சகஜம். இரு மாநில முதல்வர்களே டிவிட்டரில் மோதிக்கொண்டது புதிது.

இந்த நடைமுறைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளனர் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா.

கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கு நடுவே பிரச்சார யுத்தம் நடக்கிறது.

பாஜகவின் பிரசார பீரங்கியாக மாறி மாநிலம் முழுக்க பிரச்சார பயணங்களை மேற்கொண்டுவருகிறார் யோகி ஆதித்யநாத். மோடி அலையை போலவே யோகி அலைக்கு கர்நாடகாவில் மதிப்பு உள்ளதாக கருதுகிறது பாஜக. இதை தவிடுபொடியாக்க சித்தராமையா கையில் எடுத்துள்ள ஆயுதம், உ.பி.யில் உள்ள உணவு பற்றாக்குறை மற்றும் அது சார்ந்த இறப்பு சம்பவங்களைத்தான்.

சித்தராமையா மீது குற்றச்சாட்டு மத குற்றச்சாட்டுகளை அடுக்கும் யோகி கர்நாடக தலைநகர் பெங்களூரிலும் யோகி பிரச்சாரம் செய்தார். சித்தராமையா ஒரு இந்து என கூறிக்கொண்டு மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஊக்கப்படுத்தி பேசுவதாக குற்றம்சாட்டினார். கர்நாடகா ஹனுமார் பிறந்த இடம் என்றும் ஆனால் சித்தராமையா திப்பு சுல்தான் ஜெயந்தியை அரசு விழாவாக கொண்டாடுவதாகவும் விமர்சனம் செய்தார்.

டிவிட்டரில் போட்டி அளித்தால் கோபமடைந்த சித்தராமையா டிவிட்டர் போரை தொடுத்தார். யோகி டிவிட்டர் அக்கவுண்டுக்கே மென்ஷன் செய்த சித்தராமையா, உங்களை எங்கள் மாநிலத்திற்கு வரவேற்கிறேன். எங்களிடம் நிறைய நீங்கள் கற்றுக்கொள்ளலாம். எங்கள் மாநிலத்தின், இந்திரா கேண்டீன் (அம்மா உணவகம் மாதிரியில் செயல்படுகிறது) மற்றும் ரேஷன் கடைகளுக்கு போய் பாருங்கள்.

உங்கள் மாநிலத்தில் உணவு பற்றாக்குறையால் இறப்பு பிரச்சினை இருக்கிறதே அதை சரி செய்ய இது உதவக்கூடும். இவ்வாறு சித்தராமையா கூறியிருந்தார். இதை சுமார் 2300 பேர் இதுவரை ரீடிவிட் செய்துள்ளனர்.

இதற்கு டிவிட்டரில் சித்தராமையாவை மென்ஷன் செய்து பதிலடி கொடுத்துள்ளார் யோகி ஆதித்யநாத். 'உங்கள் வரவேற்புக்கு நன்றி. உங்கள் ஆட்சி காலத்தில்தான் கர்நாடகாவில் அதிக விவசாயிகள் இறந்ததாக கேள்விப்பட்டேன். சொல்ல மறந்துவிட்டேனே, நேர்மையான பல அரசு அதிகாரிகள் உங்கள் ஆட்சியில் இறந்துள்ளனர், பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உ.பி முதல்வர் என்ற வகையில், உங்கள் ஆட்சியில் மக்கள்படும் கஷ்டங்களையும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தவிர்த்து விட்டு ஆட்சியமைக்க முயல்கிறேன்' என்று கூறியுள்ளார். இந்த டிவிட்டை சுமார் 9700 பேர் ரீடிவிட் செய்துள்ளனர்.

817 total views