இறந்துகிடந்த பிரித்தானிய பிரபலம்....... காமெடி என 5 நிமிடங்களாக சிரித்த மக்கள்

Report
120Shares

பிரித்தானிய மக்கள் மத்தியில் பிரபலமான ஸ்டாண்ட் - அப் காமெடியன் Ian Cognito மேடையில் நிகழ்ச்சி செய்துகொண்டிருக்கையில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பைசெஸ்டர் நகரில் உள்ள அடிக் பாரில் நடைபெற்ற காமெடி நிகழ்ச்சியில் Ian Cognito தனது அருமையான பேச்சுக்களால் மக்களை சிரிக்கவைத்துக்கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென நாற்காலியில் அமர்ந்தவர் அப்படி இறந்துவிட்டார். ஆனால் இவர் காமெடி செய்துகொண்டிருக்கிறார் என நினைத்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் 5 நிமிடங்கள் தொடர்ந்து சிரித்துக்கொண்ருந்துள்ளனர்,

இதுகுறித்து நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்கள் கூறியதாவது, அவர் காமெடி செய்து நடித்துக்காட்டிக்கொண்டிருந்தார். இதனால் அவர் இறந்துவிட்டதைகூட காமெடி என நினைத்து நாங்கள் சிரித்துக்கொண்டிருந்தோம்.

நீண்ட நேரமாக அவர் அப்படியே இருந்த காரணத்தால் அவரை சோதனை செய்து பார்த்தபோதுதான் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டது தெரியவந்தது என கூறியுள்ளனர்.