பிக்பாஸ் வீட்டுக்குள் அரங்கேறும் தொடர் கொலைகள்- யார் அந்த கொலையாளி..?

Report
61Shares

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார்.

அதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் அழுது அழுது பலரையும் சங்கடப்படுத்தி வரும் நடிகை அபிராமி, இந்த வாரம் வீட்டின் தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து வழக்கம் போல் எலிமினேஷன் நடந்தது. மதுமிதா மற்றும் மீரா மிதுன் தேர்வாக, வனிதா, மோகன் வைத்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டின் தலைவியாக தன்னுடைய முதல் நாள் பணியை இன்று முதல் தொடங்கினார் அபிராமி. அதை தொடர்ந்து இந்த வாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க் இன்று வழங்கப்பட்டது. அதன்படி, பிக்பாஸ் வீட்டில் கொடூர கொலையாளிகள் நுழைந்து ஒவ்வொரு ஹவுஸ்மேட்சையும் கொல்வார்கள் என்ற கட்டளையை பிக்பாஸ் வழங்கினார்.

இதில் கொலையாளிகளாக வனிதாவும் அவருக்கு கூட்டாளியாக முகின் ராவும் தேர்வு செய்யப்பட்டனர். அவருக்கு கொடுக்கப்பட்ட கட்டளையின் படி, சாக்‌ஷி அகர்வால் போட்டிருந்த மேக்-அப்பை அழிக்கச் செய்து அவரை கொலை செய்தனர். அடுத்ததாக மோகன் வைத்தியாவை மைக்கேல் ஜாக்சன் போல ஆடவைத்து அவரையும் கொன்றனர்.

கொல்லப்பட்ட இருவருக்கும், ஆவி உடை அணிவித்து, பிக்பாஸ் வீட்டு முற்றத்தில் போடப்பட்ட மயான செட்டில் வைத்து புதைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் அங்கு ஆவியாக பொழுதை கழிக்க வேண்டும் என பிக்பாஸ் கட்டளை வழங்கினார்.

எனினும், இந்த டாஸ்க் நாளையும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட ஹவுஸ் மேட்ஸூக்கும், மற்ற போட்டியாளர்களுக்கும் வனிதா மற்றும் முகின் ராவ் தான் அந்த கொடூர கொலையாளிகள் என்பது தெரியாது. இதனால் யார் எதுபோன்று திட்டமிட்டு நம்மை கொலை செய்கிறார்கள் என்று போட்டியாளர்கள் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இதுவரை கலகமாக இருந்து வந்த பிக்பாஸ் வீடு, இன்று மிகவும் கலகலப்பாக இருந்தது. அனைத்து ஹவுஸ்மேட்ஸும் மகிழ்ச்சியாக இன்றைய நாளை கழித்தனர். எனினும், வனிதா, ஷெரீன், சாக்‌ஷி போன்றோர் அவ்வப்போது அபிராமி மீதிருந்த துவேஷத்தை காட்டியபடி இருந்தனர்.

2950 total views