''JCB பெகோ மிசினும்'', தடைப்பட்ட வரணி சிமிழ் கண்ணைகைபுரம் திருவிழாவும்.

Report
59Shares

இண்டைக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் முன்னுக்கு , வரணி வடக்கு சிமிழ் கண்ணைகைபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்திருக்கினம், அது ஏனென்டால் இந்த தடவை அந்த பகுதி கோவிலில திருவிழா நடக்கேலையாம்.

போனமுறை, இதே கோவிலில, சாதி பிரச்சனை எண்டு, அந்த பகுதியில் தேர் இழுக்கக்கூடியவர்கள் என்ற எண்ணிக்கையினரை அறங்காவல் சபைக்காரர் பெறேலையாம் எண்டு , JCB பெக்கோ இயந்திரம் தேரை இழுத்து வரலாற்று நிகழ்வை பதிவு செஞ்சு, அதை பார்த்து, இந்தியாக்காரன், சந்திராயனை இஸ்ரோ ஏவு தளத்திற்கு கொண்டு செல்ல யூஸ் பணினானாம், இதுக்கு எங்க போய் முட்ட?

டமிழரின் ஒற்றுமையும், இன ஐக்கியமும் தேவைப்படும் இந்த நேரத்தில் இந்த குறுக்கால போவாரின் ரோதனைகள் தாங்க முடியல.

- காத்தமுத்தர் -

2797 total views