சிறிதரன் எம்.பி. ஐயாவிடம் ஒரு கேள்வி!!

Report
153Shares
ஒரு கேள்வி எண்டு தலைப்பை மாறிப் போட்டுட்டினம்,
உங்களிட்ட கேக்க இரண்டு மூன்று கேள்விகள் இருக்கு பாருங்கோ
நீங்கள் அண்மையில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கோபம் உச்சத்துகேறி மயிரை சிப்பிலி கோழி மாதிரி சிலிர்த்துக்கொண்டு, சிங்கமாகக் கர்ஜித்து ஆற்றிய அந்த உரையில் சிங்கள நாடாளுமன்றமே அதிர்ந்து தான் போச்சு கண்டியளோ
சிங்கள நாடாளுமன்றம் மாத்திரமல்ல நானும் கொஞ்சம் அதிர்ந்துதான் போனன்
முஸ்லிம் தலைவர்களுக்காக நிங்கள் உணர்ச்சிவசப்பட்டு எழுப்பின குரல் இருக்கே உங்களுக்கு புல்லரிச்சுதோ இல்லையோ, அந்த முஸ்லிம் தலைவர்களுக்கு புல்லரிச்சுதோ இல்லையோ. சொன்ன நம்ப மாட்டியல் எனக்கு இப்பவும் காஞ்சோண்டி பட்ட மாதிரி புல்லரிச்சுக்கொண்டுதான் இருக்கு.
முஸ்லிம் தலைவர்களுக்காக கோபத்தோட உணர்ச்சிவசப்பட்டு நீங்கள் பேசினதை ஒரு தடவை கேட்டுவிட்டு வாங்கோ பேந்து கேள்விகளுக்குள்ள போவம்..

முஸ்லிம் தலைவர்களைப் பற்றி ஊடகங்கள் அபாண்டமாக குற்றம் சாட்டுவதாக கோபப்பட்டிருந்தீர்கள் எல்லோ? அது எந்த தலைவர்கள் எண்டு கொஞ்சம் சொல்ல ஏலுமே?

சஹ்ரான், ஹிஸ்புல்லா, ரிஷட் பதுயுதீன் பற்றித்தான் எனக்கு தெரிஞ்சு ஊடகங்களில தற்பொழுது செய்திகள் வருகிது.

அதுவும், உங்கட த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் ஐயா, யோகேஸ்வரன் ஐயா, சிறிநேசன் ஐயா, வியாழேந்திரன் ஐயா, சார்ள்ஸ் நிர்மலநாதன் ஐயா, கோடீஸ்வரன் ஐயா இவர்கள்தான் ஹிஸ்புல்லா பற்றியும், ரிஷhட் பற்றியும் ஊடகங்களுக்கு பேட்டி குடுக்கிறதோட மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்திலேயும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார்கள்.

உங்களுடைய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முஸ்லிம் தலைவர்களைப் பற்றி முன்வைத்துவருகின்ற குற்றச்சாட்டுக்கள் தவறு என்று நீங்கள் கூறவருகின்றீர்களா?

உங்கள் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் ஐயாவே ஹிஸ்புல்லாவுக்கும் 'நஷனல் தௌஹித் ஜமாத்துக்கும்' இடையில் தொடர்பு உள்ளதாக திரும்பத் திரும்பச் சொல்கிராரே, அவர் பொய் சொல்கிரார், அபாண்டமாக பழிபோடுகிறார் என்று நீங்கள் சொல்கிறிர்களா?

பொய்யான குற்றச்சாட்டுக்களை எதற்காக இந்த முஸ்லிம் தலைவர்கள் மீது முன்வைக்கின்றீர்கள் என்று உங்கள் கட்சி எம்.பி.க்களிடம் எப்பொழுதாவது கூறியுள்ளீர்களா?

உங்கள் கட்சி எம்பிக்கள் முன்வைத்துவரும் இந்த அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் பற்றி உங்கள் கட்சித் தலைமையிடம் எப்போதாவது முறைப்பாடு செய்துள்ளீர்களா?

முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும், தமிழ் கோவில் காணிகளை சுவீகரித்ததாகவும், இந்துச் சவக்காலையில் முஸ்லிம் நிலையங்களை கட்டியதாகவும் ஹிஸ்புல்லாவே பகிரங்கமாக ஒப்புக்கொள்கிராரே.. இது பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன?

அவர் செய்தது சரிதான் என்று கூறவருகின்றீர்களா?

இதே ஹிஸ்புல்லா மன்னார் ஓலைத்தொடுவாய் உவரி பகுதியில் 508 ஏக்கர் தமிழர்களின் பூர்வீகக் காணியை முஸ்லிம்களின் வீட்டுத் திட்டத்திற்காகவென்று வாங்கியுள்ளதாக இன்று செய்தி வெளியாகி உள்ளதே, அது பற்றிய உங்களது அபிப்பிராயம் என்ன?

வவுனியா, மன்னார், தண்ணீரூற்று பிரதேசங்களில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அரசியல் அதிகாரங்களைப் பாவித்து ஒரு முஸ்லிம் தலைவர்; அபகரித்து வருவது பற்றியும், நீதிபதியைக் கூட மிரட்டி அவர் அடாவடி செய்துவருவது பற்றியும் உங்களுக்கு தெரியுமா?

தெரியாவிட்டால் பறவாயில்லை. தெரியும் என்றால் இந்த விடயம் பற்றி பற்றிய உங்களுடைய அபிப்பிராயம் என்ன?

உங்கட நாடாளுமன்ற உரையில ஒரு விடயத்தை ஆணித்தரமாகச் சொல்லியிருந்தீர்கள்.

இந்த முஸ்லிம் சகோதரர்கள் காப்பாற்றப்படவேண்டும் என்றும். அதுவும் எனது இனத்தின் சார்பாகச் இதனைச் சொல்லுகிறேன் என்று வேறு கூறியிருந்தீர்கள்.

நல்ல விசயம்.

யாரிடம் இருந்து இவர்கள் காப்பாற்றப்படவேண்டும் என்று கூறியிருந்தீர்கள்?

உங்கள் கட்சி எம்பிக்களிடம் இருந்தா? அல்லது ஊடகங்களிடம் இருந்தா? அல்லது சட்டத்திடம் இருந்தா?

இன்னும் நிறையக் கேள்விகள் இருக்கு. கேக்கிறதுக்குத்தான் இப்ப நேரம் இல்ல.

உங்கள் மேல எனக்கு நிறைய மதிப்பும் மரியாதையும் இருக்கு. உங்கள ஒரு தளபதி போல காட்டிக்கொண்டு நீங்கள் அடிக்கடி விடுகிற அறிக்கைகளில மயங்கிக்கிடக்கிற தமிழர்களில நானும் ஒருவன். தமிழரசுக் கட்சியின் தலைவரா நீங்கதான் வரவேனும் எண்டு செல்வச்சன்னிதியில நேத்தி வைக்கிற பல தேசியவாதிகளில நானும் ஒருத்தன். அதனாலதான் உங்களிட்ட இந்தக் கேள்விகளைக் கேட்டனான். தவறா இருந்தா மன்னித்துக்கொள்ளுங்கள்.

உங்களுடைய சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பேரம்பேசல்களில் ஈடுபட்டு வருவதாக கடந்த வருடம் உங்களுடைய கட்சி எம்.பி. ஒருவர் தெரிவித்த ஓடியோவையும் இத்துடன் இணைத்துள்ளேன். ஏன் இணைத்துள்ளேன் என்று எனக்கே தெரியவில்லை. உங்களுக்கு விளங்கினா எனக்கு கண்டிப்பா சொல்லுங்கோ.

மீசை வழிக்க பிளேட் இல்லாட்டில் உடைஞ்ச சோடா போத்திலால வழியடா எண்டு எனக்கு ஒரு வாத்தியார் அப்ப சொன்னவர். அது ஏன் எண்டு எனக்கு எனக்கு அப்ப விளங்கேல........இப்படிக்கு

காத்தமுத்தார்

5765 total views