ட்ரம்பின் உரையால் தூங்கிய ட்ரம்ப்

Report
10Shares

அமெரிக்காவின் டெலாவர் மாகாணம் வில்மிங்டன் நகரைச் சேர்ந்தவர் ஜோஷ்வா ட்ரம்ப் அங்குள்ள பள்ளி ஒன்றில் தரம் 6 இல் கல்வி கற்று வருகிறான்.

அச் சிறுவனின் பெயருடன் ட்ரம்ப் ஒட்டிக்கொண்டிருப்பதால் பள்ளியில் சக நண்பர்கள் மட்டம் தட்டிப் பேசி வந்துள்ளனர். இதனால், ஜோஷ்வா மன வேதனை அடைந்தார்.

ஜோஷ்வாவின் நிலையை அறிந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் அச்சிறுவனை சந்தோஷப்படுத்த முடிவெடுத்தனர்.

இதையடுத்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையாற்றும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப் ஆகியோர் அழைப்பு விடுத்து இருந்தனர்.

ஸ்டேட் ஆஃப் யூனியன் எனும் அமெரிக்க ஜனாதிபதியின் உரையில் கலந்துகொள்வதற்காக மொத்தம் 13 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந் நிகழ்வில் கலந்துக் கொண்டு ஜனாதிபதியின் நீண்ட உரையை முழுமையாக கேட்பதற்குள் இந்த சிறுவன் தூங்கி விட்டான்.

ஜோஷ்வா ட்ரம்ப் தூங்கி வழியும் புகைப்படங்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

ஜோஷ்வா ட்ரம்ப் தனது எதிர்ப்பை காட்டியிருப்பதாக, ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஜோஷ்வா ட்ரம்பை கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1144 total views