முட்டை செருப்பால் அடித்து துரத்தபட்டாரா குஷ்பு! மீண்டும் திரும்பும் அதேநிலை?

Report
125Shares

தி.மு.க.வில் இருந்து முட்டை, செருப்பால் அடித்து குஷ்பு வெளியேற்றப்பட்டார் என்றும், காங்கிரஸ் கட்சியில் அவரது நடிப்பு எடுபடாது என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.

இது குறித்து பேசிய அவர், நான் ராகுல்காந்தியின் நேரடி உத்தரவின்பேரில் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். குஷ்பு என்னை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.

என்னை பதவியில் இருந்து நீக்குவேன் என்று குஷ்பு சொல்கிறார். அந்த யோக்கியதை அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது. என்னை பதவி நீக்கம் செய்ய அவர் யார்?. பத்திரிகைகளில் செய்தி வர வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா?. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

உண்மைக்கு மாறான தகவல்களை எப்படி அவர் கூறலாம். அதற்கான தைரியத்தை அவருக்கு யார் கொடுத்தது?. தலைமை இவரிடம் கருத்து கேட்டதா?. இதுபோன்ற பொய்யான புகார்களை குஷ்பு தெரிவித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.குஷ்பு ஒரு நடிகை.

படங்களில் அவர் எந்த வேடத்திலும் நடிக்கலாம். ஆனால் காங்கிரசில் அவர் நடிப்பு எடுபடாது. தி.மு.க.வில் இருந்தபோது நீங்கள் ஏன் வெளியேற்றப்பட்டீர்கள் என்பது தமிழக மக்களுக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் தெரியும்.

முட்டையால், செருப்பால் அடித்து வெளியேற்றினார்கள். அந்தநிலை காங்கிரஸ் கட்சியிலும் திரும்பும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

6387 total views