மீண்டும் அரசியலில் குதிக்கிறாரா பாக்யராஜ் ?

Report
93Shares

அமைச்சர் செல்லூர் ராஜு உட்பட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொள்ள மதுரை ரசிகர்கள் ஏற்பாடு செய்த தனது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள மனைவி பூர்ணிமாவுடன் வந்த இயக்குநர் கே.பாக்யராஜ்

செய்தியாளர்களிடம், ''அ.தி.மு.க.வின் கடைசி தொண்டனாகிய என்னுடைய உணர்வு அனைவரும் ஒன்று சேர்ந்து அதிமுக. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் இருந்த நிலைக்கு வர வேண்டும். ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஒன்றிணைந்த மாதிரி, தினகரன் அணியினரும் ஏன் ஒன்றிணைய முடியாது? எதிரிகளின் தாக்குதல் அதிகமாகும் போது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற நிலையில் ஒன்றிணையலாம்.

எம்.ஜி.ஆர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த மாதிரி, பிறர் வருவதில் அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அவர்கள் வரக் கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

ஆனால் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் அரசியலில் நிலைத்து இருப்பது, தேர்தல் நேரத்தில் பொது ஜனங்கள் எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது. அரசியலுக்கு வருவதற்கு முன் சினிமாவில் இருந்த போது மக்களுக்கு என்ன செய்தார்கள்? அரசியலுக்கு வந்த பிறகு இப்போது என்ன செய்கிறார்கள்?

சினிமாவில் இருந்தபோது ஏன் செய்யவில்லை? எனப் பொதுஜனங்கள் சிந்தித்து, தேர்தல் நேரத்தில் எடுக்கும் முடிவுதான் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் அரசியலில் நிலைக்க காலம் பதில் சொல்லும். எனக்கு மீண்டும் அரசியலில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அதைப்பற்றி அறிவிப்பேன்'' என்றார்.

4473 total views