கணவருக்கு பர்தாவை மாட்டிவிட்டு ஜோடியாக ஊர் சுற்றி கூட்டி வந்த மனைவி! பாகிஸ்தானில் நடந்த ருசிகர சம்பவம்

Report
83Shares

பாகிஸ்தானை சேர்ந்த ஒரு தம்பதியினர் வித்தியாசமான முறையில் ஒரு உணவகத்திற்கு சென்று உள்ளனர்.

பொதுவாகவே மத ரீதியான அடிப்படையில் பெண்கள் பர்தா அணிந்து கொண்டு வெளியில் வருவது வழக்கம். ஆனால் ஒரு தம்பதியினரில் மாறுதலாக தன்னுடைய கணவருக்கு பர்தா அணிவித்து வெளியே அழைத்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஒரு உணவகத்திற்கு வந்து அங்கு இரவு உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட செல்பி புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூகத்தில் வைரலாக பரவி வருகிறது மேலும் இந்த புகைப்படம் குறித்த கருத்தினை பல்வேறு தரப்பினர் எதிர்த்தும் பலரும் பாராட்டியும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த உலகில் ஆண் பெண் சமம் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவராம் இந்த பெண். இதனை உணர்த்தும் விதமாக அவருடைய பதிவின் நடுவே ஒரு கருத்தை பதிவு செய்து உள்ளார் மனைவி.