திருமணம் முடிந்த 3 நிமிடத்தில் விவாகரத்து பெற்ற புதுமணத்தம்பதி!

Report
11Shares

குவைத் நாட்டில் திருமணம் முடிந்த 3 நிமிடங்களில் புதுமணத்தம்பதியினர் விவாகரத்து பெற்றுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

திருமண பந்தத்தை பொறுத்தவரை, கணவன் - மனைவி இருவருக்குள்ளும் ஒரு பரஸ்பர புரிதல் இல்லாத சமயத்தில் தான் விவாகரத்து வரை செல்லக்கூடும்.

ஒரு சில தம்பதியினர் திருமணம் முடிந்த பல ஆண்டுகள் கழித்து பெறுவார்கள், வேறு சிலர் சில வாரங்களிலேயே விவாகரத்து பெறுகின்றனர்.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி குவைத்தில் ஒரு புதுமணத்தம்பதியினர், திருமணம் முடிந்த 3 நிமிடங்களில் விவாகரத்து பெற்றுள்ளனர்.

தம்பதியினர் இருவருக்கும் ஒரு நீதிபதியின் முன்பு திருமணம் நடந்துள்ளது. அப்பொழுது விளையாட்டிற்காக மணமகன், முட்டாள் என மணமகளை கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மணமகள், உடனடியாக விவாகரத்து வேண்டும் என நீதிபதியிடம் கூறியிருக்கிறார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி, அடுத்த நிமிடமே அதற்கான வேலைகளையும் செய்துள்ளார்.

இதனை பார்த்த இணையதளவாசிகள் பலரும் கேலியாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதேசமயம் குவைத் வரலாற்றில் திருமணம் முடிந்து அதிவேகத்தில் விவாகரத்து பெற்ற முதல் தம்பதி இவர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.