பேஸ்புக்கின் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞர்!

Report
226Shares

சென்னையை சேர்ந்த பவன் ராகவேந்திரன் என்ற இளைஞர் பேஸ்புக் மூலம் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி தன்னைப்போன்ற பிற இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.

பொறியியல் படித்துவிட்டு ஐடி துறையில் வேலை பார்க்க விருப்பமில்லாமல், தனது பிடித்த தொழிலை செய்ய வேண்டுதம் என முடிவு செய்தார் பவன். இயற்கையின் மீது அதிக பிரியம் கொண்ட இவர், தனது வீட்டின் மாடித்தோட்டத்தில் பூச்செடிகளை வளர்க்க ஆரம்பித்தார்.

தனது பயணம் பற்றி அவர் கூறியதாவது, பெரும்பாலும் எங்கள் வீட்டிற்குத் தேவைப்படும் காய்கறிகளை நான் என் தோட்டத்திலேயே வளர்த்து அதனையே பயன்படுத்திக் கொள்வோம்.

அப்படி ஒரு நாள், நான் வாங்கிய செடியை நட என் வீட்டுத் தோட்டத்தில் இடம் இல்லாததால் அதனை யாருக்காவது தந்து விடலாம் என்று எண்ணினேன். அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் என தெரிந்தவர்கள் யாரும் வாங்க முன் வராததால் பேஸ்புக்கில் இந்த தகவலை பதிவிட்டேன்.

அப்போது, பெண்மணி ஒருவர் தனது மகளின் பிறந்தநாளுக்கு வருபவர்களுக்கு பூச்செடி கொடுக்கவேண்டும் என என்னை தொடர்பு கொண்டு 30 பூச்செடிகளை ஆர்டன் செய்தார்.

அவர்தான் எங்களுடைய முதல் வாடிக்கையாளர். அதன்பின்னர் தான் பி.கே.ஆர்.கிரீன்ஸ் நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் காய்கறிகள், பூச்செடிகள் , அப்பளம் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார்.

மாதம் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார் பவன். எங்கள் முன்னேற்றத்திற்கு முழுக் காரணம் எங்களிடம் வியாபாரம் செய்யும் வாடிக்கையாளர்கள் தான். நான் ஒவ்வொரு வாடிக்கையாளர்கள் வீட்டில் செடிகளை டெலிவரி செய்யும் போதும் அவர்கள் என்னிடம் நிறைய அறிவுரைகள் கூறுவார்கள். அதனை பின்பற்றியதாலே நான் இந்தளவுக்கு இருக்கிறேன்.

மேலும் மாடித்தோட்டம் அமைத்துத் தருவது மூலமும், கல்யாணத்திற்கு வரும் விருத்தினருக்கு ரிட்டர்ன் கிஃப்ட்டாக செடிகளை அவர்களுக்கு கொடுப்பதன் மூலமும் அவர்களுக்கு இயற்கை மீதான விழிப்புணர்வு ஏற்படுகிறது.

நாங்கள் இருக்கும் இடம் கிராமங்களுக்கு அருகே உள்ளதால், அங்கு இருப்பவர்கள் ஆரோக்கிய முறையில் அப்பளம் தயாரிப்பது ஆரோக்கியமான உணவுகளை, பொருட்களை தயாரித்து வந்துள்ளனர், ஆனால் அதனை அவர்கள் விற்கமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர். நானும் என் குழுவும் அவர்களை சந்தித்து அவர்கள் தயாரிப்பவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.

இயற்கை முறையில் எப்படி உரம் செய்வது போன்ற செயல்முறைகளை மாணவ மாணவிகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளிக்குச் சென்று கற்றுக் கொடுத்து வருகிறோம். இதனால் அவர்களுக்கு இயற்கை முறை விவசாயம் மேல் ஒரு விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறேன் என கூறுகிறார் பவன்.

10278 total views