கலவரத்தால் டிவிட்டரில் புகைப்படத்தை மாற்றிய திரிணாமுல் தலைவர்கள்.. காரணம் இதுதானா?

Report
5Shares

கொல்கத்தாவில் நேற்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையினர் இடையே கடும் வன்முறை நேரிட்டது.

அதன்பின் தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையையும் உடைக்கப்பட்டது. உடைத்தது பா.ஜ.க.வினர் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.

இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் புகைப்படங்களை மாற்றியுள்ளனர். சமூக சீர்திருத்தவாதி வித்யாசாகர் புகைப்படத்தை தங்களுடைய அடையாள புகைப்படமாக வைத்துள்ளனர்.

பா.ஜ.க.விற்கு எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ், தெரிக் ஒ பிரையன் ஆகியவர்களின் டிவிட்டர் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே பா.ஜ.க.வை கண்டித்து போராட்டம் மேற்கொள்ளவும் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.

754 total views