விஜய்யின் ரகசிய திட்டத்தை போட்டுடைத்த ராதாரவி..!பரபரப்பில் ரசிகர்கள்

Report
32Shares

நடிகர் விஜய் தொடர்ந்து அரசியல் குறித்த படங்களில் நடித்து வருவதால் விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவதற்கு திட்டமிடுவதாக ராதாரவி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் இப்போது ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இது முழுக்க முழுக்க அரசியல் படமாக தயாராகி வருகிறது.

மெர்சல் திரைப்படத்தில் அவர் பேசிய வசனங்கள், அரசியல் குறித்து அவ்வப்போது கூறும் கருத்துக்கள் எல்லாம் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்பதை எடுத்துகாட்டும் விதமாக உள்ளது.

இந்த நிலையில் நடிகர் ராதாரவியும் விஜய் அரசியலுக்கு வர திட்டமிடுகிறார் எனக் கூறியுள்ளார். எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் தைரியமாகப் பேசக்கூடியவர் நடிகர் ராதாரவி. அவர் இப்போது விஜய்யின் சர்க்கார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய ராதாரவி, "என்னைப் பொருத்தவரை விஜய் அரசியலில் இறங்க திட்டம் தீட்டுகிறார் எனத் தோன்றுகிறது. அரசியலுக்கு வர நிதானம் தேவை. விஜய் நிதானமாக எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவருகிறார். ஆனால் நிச்சயமாக எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அரசியலுக்கு முக்கியம்.

மேலும் தனக்குள்ள மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை எல்லாவகையிலும் கையாள தேர்ந்தவராக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதுமிருக்கும் ரசிகர்கள் பலர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென்றே எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களில் ஆளப்போறான் தமிழன் தான். அதேபோல், ரசிகர்களை ஒன்றிணைத்து பல நல்ல விஷயங்களையும் விஜய் செய்துவருவதற்கு சமீபத்திய உதாரணம் கேரளாவுக்கு செய்த உதவி.

விஜய்யை நிச்சயம் அரசியலுக்கு இழுத்துவிடுவார்கள் என சமீபத்தில் சிம்பு கூறியிருந்த நிலையில், ராதாரவி இவ்வாறு தெரிவித்துள்ளார். சினிமாவில் விஜய்க்கு சீனியர்களான ரஜினி கமல் அரசியல் பிரவேசத்தைப் பார்த்து முடிவெடுப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

1874 total views