கீர்த்தியை தொடர்ந்து பிக்பாஸ் லாஸ்லியாவிடம் சிக்கியது காமெடி நடிகரா? உண்மையை உடைத்த ஹர்பஜன் சிங்

ஈழத்துப்பெண்ணாக செய்து வாசிப்பாளராக இருந்து பின் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. பிக்பாஸில் நடிகர் கவினுடன் காதலில் இருந்தது வெளிப்படையாக இருந்து பின் தந்தையின் கோபத்தால் காதலை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்.
பிக்பாஸிற்கு பிறகு பல கிசுகிசுக்கள் வந்த நிலையில் அவரின் தந்தை மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து அந்த நிலையில் இருந்து மீண்டு வந்த லாஸ்லியா இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் லாஸ்லியாவை இந்த நடிகர்தான் காதலிக்கிறார் என்று பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அவரது டிவிட்டர் பக்கத்தில் காமெடியாக கூறியுள்ளார்.
பிரெண்ட்ஷிப் என்ற தமிழ் படத்தில் லாஸ்லியா மற்றும் ஹர்பஜன்சிங் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தில் காமெடி நடிகர் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
படத்தில் நடித்து நண்பர்களாக இருந்ததற்கு சதிஷ் ஐ லவ் யு ப்ரோ என்று டிவிட்டர் பதிவி செய்திருந்தார்.
இந்நிலையில் ஹர்பஜன் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நீ லாஸ்லியாவை தானே லவ் பண்றேன்னு சொன்ன என்று பிரெண்ட்ஷிப் பட புரமோஷனுக்காக ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். தமிழ்நாட்டில் விஷயம் புரியாமல் சிங்கு இந்த வேலையை செய்து விட்டார் போல.
இதனால் சதீஷ்க்கு சங்கு ஊதும் அளவுக்கு சர்ச்சைகள் எழுந்துள்ளது. பொதுவாகவே சதீஷ் நடிகைகளை பார்த்து ஜொல்லு விடுவது தெரிந்த விஷயம்தான். பட புரமோஷன் என்பதால் பெரிய அளவு பிரச்சனையை ஏற்படவில்லை என்கிறார்கள். ஆனால் ஹர்பஜன்சிங் இப்படி கூறியது லாஸ்லியாவுக்கு ரொம்ப வருத்தமாம்.
மச்சி என்ன இப்பிடி பச்சயா பொய் சொல்ற நீ #Losliya வை தான லவ் பன்றேன்னு சொன்ன.. அன்னிக்கு இந்த விஷயம் தெரியுமா ?? #FriendshipMovie #FriendshipSummer ,😜 நம் நட்பு என்றும் தொடரும் தோழா https://t.co/9RonGKhMl2
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 20, 2021