சேலை மாற்றும் போது ரூமிற்குள் டைரக்டர் உள்ளே வந்துட்டாரு! உண்மையை உடைத்த சீரியல் நடிகை ஆயிஷா

Report
0Shares

நடிகைகளுக்கு சினிமாவில் பல விதங்களில் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொடுமைகள் நடக்கிறது என்று சமீபத்தில் மீ டூ கூறி வருகிறார்கள். அது முன்னணி நடிகைகள் முதல் குழந்தை நட்சத்திரங்கள் வரை இப்படியான சம்பவங்கள் நடக்கிறது.

அந்தவரிசையில் தனக்கு இந்த கொடுமை நடந்திருக்கிறது என்று சீரியல் நடிகை ஆயிஷா கூறியுள்ளார். சில வருடங்களுக்கு முன் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி சீரியல் பொன்மகள் வந்தாள். நல்ல வரவேற்பை பெற்று வந்த அந்த சீரியலில் இருந்து ஆயிஷா வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து சத்யா சீரியலில் நடிக்க கமிட்டாகி போல்ட்டான பெண்ணாக நடித்து வருகிறார் ஆயிஷா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், திருமண காட்சிகள் நடைபெற்றிருந்த ஒரு சீரியலில் திருமண சேலை மாற்ற 3 மணி நேரம் ஆகியது.

அப்போது இயக்குநர் நான் சேலை மாற்றும் அறைக்கு வெளியே வந்து என்ன இவ்வளவு நேரம் என்று கத்தினார். உடனே மேக்கப் ஆர்ட்டிசை அணிப்பி கதவை திறக்க சொன்னேன். நான் கதவு பின்னால் மறைந்து நின்றேன். அப்போது, பாதி சேலை அணிந்திருந்த என்னை பார்த்து கடுமையாக திட்டினார். உடனே உடலை போர்த்தியவாறு நின்று நானும் அவருடன் பேசினேன்.

இதைதொடர்ந்து அந்த இயக்குநர் என்னை எப்போதும் திட்டி கொண்டே இருந்து வந்தார். இதற்கு பின் என்னை தயாரிப்பாளர்கள் நடிக்க கூடாது என்று கூறியதாக இயக்குநர் கூறினார். இதனால் பல படங்களில் இருந்து வந்த வாய்ப்பையும் விட்டு இந்த சீரியலில் நடித்து கொடுத்தேன். அதனால் நான் உடைந்து உட்கார்ந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.