உடல் மெலிந்து அடையாளம் தெரியாமல் மாறிய வைகைபுயல் வடிவேலு! கண்ணீர் விட்டு அழ இதுதான் காரணம்!

Report
0Shares

தமிழ் சினிமாவில் வைகைபுயல் என்ற பெயரை பெற்று அனைத்துவித முகபாவனைகளால் நம்மை சிரிக்க வைத்து வருபவர் நடிகர் வடிவேலு. நகைச்சுவைக்கென்றே இவரின் காமெடி காட்சிகள் அமைந்து ஒட்டுமொத்த சினிமாவையும் மகிழ வைத்து வருகிறார்.

இவரை வைத்து இன்றும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கடவுளாகவும் இருந்து வருகிறார். இதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பெருமையாக பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறியிருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில், வைரலானது. இதற்கு காரணம் வடிவேலும் அவர்கள் டயர்ட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சமீபத்தில் கர்ணன் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டியளித்த நடிகர் வடிவேலு, நீங்கள் ஒருவருடம் தான் லாக்டவுனில் இருக்கிறீர்கள். நான் 10 வருடங்களாக லாக்டவுனில் வாழ்ந்து வருகிறேன்.

நடிக்க தெம்பு இருக்கிறது. அதுமட்டுமில்ல வீட்டிலேயே முடங்கி கிடப்பது எனக்கு மரண வேதனையை கொடுக்கிறது

படவாய்ப்புகள் கொடுக்க யாரும் வருவதில்லை என்றும், ’சேராத இடத்தில் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா’ என்றகர்ணன் பட பாடலில் வரியை கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

சூர்யாவின் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தில் வடிவேலு நடிக்க போகிறார் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.