கையை பிடித்து ரொமான்ஸில் ஆல்யா மானசா! ஹூட்டிங்கில் சித்துவிடம் சண்டை போட்ட சஞ்சீவ்.. வைரல் வீடியோ..

Report
2Shares

சின்னத்திரை ஜோடிகள் பல பிரபலகள் இருந்து வருகிறார்கள். அதிலும் ஒரே சீரியலில் ஜோடியாக நடித்து திருமணம் செய்தவர்களில் மிகவும் பிரபலமானவர்கள் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி தான்.

சமீபத்தில் தான் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே இருவரும் வேறு வேறு சீரியலில் நடித்து வருகிறார்கள்.

கணவருடன் ராஜா ராணி முதல் சீசனில் இருவரும் நடித்த பின், ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடிகர் சித்துவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த எபிசோட்டில் சித்து ஆல்யாவிற்கு நகம் வெட்டிவிடும் ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்நிலையில் சஞ்சீவ் அந்த காட்சி எடுக்கும் போது உள்ளே நுழைந்து சித்துவின் கழுத்தை பிடித்து என்னடா நடக்குது என்று க்யூட் சண்டை போட்டுள்ளார். இதை கண்ட ஆல்யா சிரித்தபடியே பேசியுள்ளார். சித்து ஷாக்காகி சிரித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுபோன்று மனைவிவின் கரியருக்காக எவ்வளவு சப்போர்ட்டாக இருக்கிறார் என்று சஞ்சீவ் ஒரு எடுத்து காட்டு என்று வீடியோவை பார்த்து ரசிகர்கள் கருத்துக்களை வாழ்த்துகளை ஆல்யா மானசாவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.