இவரை மாப்பிள்ளையாக்க துடிக்கும் ரம்யா பாண்டியனின் குடும்பம்? கூடப்பிறந்தவர்கள் கூறிய பதில்..

Report
10480Shares

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே பலரின் கவனத்தை இழுத்தவர் நடிகை ரம்யா பாண்டியன். போட்டோஹுட்டில் இடுப்பை காட்டி கவர்ந்து பின் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார்.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விஷப்பாம்பு என பல பட்டை பெயரினை ரசிகர்களால் பெற்று வருகிறார். இறுதி தருணத்தை கடக்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் பற்றி போட்டியாளர்களுக்கிடையே கிசுகிசுக்கள் இணையத்தில் பரவி வருகிறது.

அந்தவகையில், ரம்யா பாண்டியனுக்கும் சோமுக்கும் இடையே இருப்பது என்ன என்பதை ரம்யா பாண்டியனின் குடும்ப உறுப்பினர்கள் மௌனம் கலைத்து உள்ளனர்.

இதுகுறித்து சமீபத்தில் நடிகை ரம்யா பாண்டியனின் அக்கா திரிபுரசுந்தரி பாண்டியன் அளித்த பேட்டியின்போது, ‘சோம் சேகரும் ரம்யா பாண்டியனும் திருமணம் செய்வது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்’ என கூறியிருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க, பிக்பாஸ் வீட்டில் நடந்த ஃப்ரீஸ் டாஸ்கின் போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ரம்யா பாண்டியனின் சகோதரர், சோம் சேகரை மச்சான் என அழைத்தது பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அதுமட்டுமில்லாமல் ரம்யா பாண்டியனின் தம்பி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘சோம் சேகருடன் நேரம் கழித்து நன்றாக இருந்தது, தங்கமான மனுஷன்’ என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு ரசிகர் ஒருவர், ‘ரம்யா பாண்டியனும் சோம் சேகரும் திருமணம் செய்து கொள்வதை நீங்கள் விரும்புகிறீர்களா?’ என்ற என்று கேள்வி கேட்டதற்கு, அது அவர்கள் எடுக்கவேண்டிய முடிவு என்று பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக ரசிகர்களும் ரம்யா பாண்டியன் - சோமை வைத்து கிண்டலடித்தும் ஒன்றாக உட்கார்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வெறுப்பேற்றி வருகிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், ஏதாவது ஒரு காதல் ஜோடி ஒன்று சேராத? என்ற எதிர்பார்ப்பில் பிக்பாஸ் ரசிகர்கள் இருப்பதாக தெரிகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று அனைத்து போட்டியாளர்களும் மிகவே உசாராக தங்கள் விளையாட்டை விளையாடி உள்ளனர்.