மீண்டும் நாக சைதன்யாவின் முதல் மனைவியை பற்றிய பேச்சு; சமந்தா கூறிய அதிர்ச்சி பதில்

Report
148Shares

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து காதலித்து 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு பிறகும் சமந்தா படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதையடுத்து, தற்போது சமந்தா தன் கணவரின் பிறந்தநாளை கொண்டாட மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் வெள்ளை நிற பிகினியில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பதிவு செய்ய ரசிகர்கள் வாயடைத்தே உள்ளனர்.

இந்நிலையில், நாக சைதன்யாவின் முதல் மனைவி குறித்து மீண்டும் இணையத்தில் பேச்சு கிளம்பியுள்ளது.

அட என்னது நாக சைதன்யாவுக்கு முதல் மனைவி இருக்கிறாரா? என்று பதற வேண்டாம்.

நடிகை லக்ஷ்மி மஞ்சு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சமந்தா தான் தன் கணவருக்கு முதல் மனைவி இருப்பதாக கூறினார். அந்த முதல் மனைவி வேறு யாரும் இல்லை, தலையணை தானாம்.

இதுகுறித்து, சம்ந்தா கூறியதாவது, படுக்கை அறையில் நாக சைதன்யாவுக்கு முத்தம் கொடுப்பதாக இருந்தாலும் தலையணை எங்களுக்கு இடையே இருக்கும்.

அந்த அளவுக்கு அவருக்கு தலையணையை பிடிக்கும். அதனால் அது தான் அவரின் முதல் மனைவி. நான் இரண்டாவது மனைவி தான் என்றார்.

சமந்தா எப்பொழுதோ சொன்ன முதல் மனைவி விஷயத்தை பற்றி தற்போது சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.