பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த சினிமா பிரபலங்களை போல் இருக்கிறார்களா? வியப்பில் ரசிகர்கள்!

Report
19Shares

அக்டோபர் 4ல் கோலாகலமாக துவங்கியது பிக்பாஸ் 4. உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த வாரம் வந்து அனைவரையும் கதிகலங்க வைத்திருந்தார்.

இதையடுத்து போட்டியாளர்களுக்குள் பல டாஸ்க்கள் வைத்து வைல்ட் கார்ட்டில் தொகுப்பாளினி அர்ச்சனா வரவழைக்கப்பட்ட வீட்டில் இருப்பவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சிலர் பார்ப்பதற்கு பிரபலமான நட்சத்திரங்களை ஒத்துள்ளனர் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது.

அதாவது ஆஜித் பாபிசிம்ஹாவையும், சோமசுந்தரர் தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவையும், ரம்யா பாண்டியன் கைதி படத்தில் வந்த குழந்தை நட்சத்திரத்தையும் ஒத்துள்ள முகத்தோற்றத்தை கொண்டிருப்பதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது ஒருபுறமிருக்க தற்போது ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களுக்கு இடையே டிசைன் டிசைனாக வாக்குவாதங்கள் உருவாகி ரசிகர்களுக்கு விருந்து அளித்து வருகிறது எனபது குறிப்பிடத்தக்கது.