சூர்யா-ஜோதிகாவை அசிங்கப்படுத்தும் பிரபல இயக்குநர்?.. கமிஷ்னரை சந்தித்த ரசிகர்கள்..

Report
64Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. சினிமாவை தாண்டி சில சமுக நலன்களை செய்தும் வருகிறார்.

சமீபத்தில் நீட் தேர்வு சம்பந்தமான அறிக்கையை வெளியிட்டு சில பிரச்சனையிலும் சிக்கி வருகிறார். இதுகுறித்து, நீதிமன்றம் பற்றி அவதூறு தகவல்களை வெளியிட்டதாக புகார் எழுந்தது. சூர்யாவின் கருத்தை நீதிமன்ற அவமதிப்பாக கருத சென்னை ஐகோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது.

இந்நிலையில் சமீபகாலமாக நடிகர் சூர்யா அவரது மனைவி மற்றும் அவரது தந்தை சிவகுமார் போன்றவர்களை அவதூறாக பேசியும் தரக்குறையான தகவல்களை பரப்பி அசிங்கப்படுத்தி வருவதாகவும் கூறி, அகில இந்திய தலைமை சூர்யா நற்பணி இயக்க நிர்வாகிகள் சென்னை போலிஸ் கமிஷ்னரிடன் புகாரளித்துள்ளனர்.

சூர்யா, ஜோதிகா மற்றும் சிவகுமார் பற்றி முகநூல் பக்கம் ஒன்றில் தான் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதை செய்து வருவது ஒரு சினிமா இயக்குநர் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலிசார் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர்.