மகனுக்காக சர்ச்சைக்குறிய இயக்குநரிடம் கெஞ்சிய சியான் விகரம்?..அடுத்த பரபரப்பை ஏற்படுத்தும் துருவ்!

Report
161Shares

சினிமாவில் உடலை வருத்திக் கொண்டு நடிப்பதற்கு பலர் யோசிப்பார்கள். அப்படியாக உடலை குறைத்தும் கடுமையாக வருத்தியும் நடிக்க வேண்டும் என்றால் ஓடிவிடுவார்கள். அப்படிப்பட்ட படங்களை தேர்வு செய்து பல விருதுகளை கைக்குள் கொண்டு வந்தவர் தான் நடிகை சியான் விகரம்.

தற்போது இளம்நடிகர்களுக்கு இவர் தான் இன்ஸ்பிரேஷன். அவரை தொடர்ந்து சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க அறிமுகமானார். தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்தார்.

ஆதித்ய வர்மா என்ற பெயரில் வெளியான இந்தப்படம் மண்ணைக் கவ்வியது. இருந்தாலும் அந்த படத்தில் நடிப்புக்கு துருவ் விக்ரமுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

இந்நிலையில் அடுத்ததாக சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்ததாக தமிழ் சினிமாவின் சமீபத்திய சர்ச்சை இயக்குனராக மாறியுள்ளார் மாரி செல்வராஜ். இவர் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை எடுத்து வருகிறார். இந்த படமும் பரியேறும் பெருமாள் படத்தைப் போல ஒரு குறிப்பிட்ட சாதியினரை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறதாம்.

அதே போல் விக்ரம் தன்னுடைய மகனுக்கு ஒரு படம் வேண்டும் என அவரைக் கேட்டுக் கொண்டதால் அடுத்த படத்தை அவரை வைத்து இயக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

மேலும் இந்த படத்தில் விக்ரம் தனது சொந்த தயாரிப்பில் தயாரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

எப்படியாவது தன்னுடைய மகனை முன்னணி நடிகராக மாற்றி விட வேண்டும் என விக்ரம் தவிக்கும் தவிப்பு சரிதான் என்கிறார்கள் ரசிகர்கள்.