49 வயதான நடிகையிடன் கொச்சையான வார்த்தையில் மெசேஜ் செய்த ரசிகர்.. பதிலடி கொடுத்த குஷ்பு..

Report
54Shares

தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை குஷ்பு. முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு மற்றும் தெலுங்கு, மலையாளம் நடிகர்கள் என பல மொழிகளில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

தற்போது குணச்சித்திர வேடங்களிலும் சீரியல்களிலும் நடித்தும் வருகிறார். தற்போது 50 வயதை நெருங்கிய நடிகை குஷ்பு இணையத்தில் அரசியல் சினிமா பற்றி பேசியும் வருகிறார்.

நடிகை குஷ்பு அவ்வப்போது வாய் தகராறில் ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல. எப்போதுமே குஷ்பு சமூக வலைத்தளத்தில் எதையாவது பதிவிட்டால் அதற்கு மாறாக வம்புக்கு இழுப்பார்கள் ரசிகர்கள்.

சமீபத்தில் நடிகை குஷ்பு பதிவிட்ட ஒரு பதிவுக்கு ரசிகர் ஒருவர், பிறந்தநாளுக்கு போட்டோ போடுவீங்க, திருமண நாளுக்கு அந்த புகைப்படத்தை போடுவீங்க. இதுதா உங்க சாமானியர் வாழ்க்கை முறை. அதாவது கூத்தாடிகளின் வாழ்க்கை என மெசேஜ் செய்துள்ளார்.

இப்படியாக பல ரசிகர்கள் மெசேஜ் செய்தாலும் இந்த இளைஞர் செய்த செயலால் செம டென்ஷன் ஆன குஷ்பு, உங்க அம்மா யாருடா? கூத்தாடி பற்றி இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்க என சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.

இந்த செய்தி தான் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சில சமயம் தொடர்ந்து நடிகைகளிடம் இதுபோன்ற ரசிகர்கள் எல்லை மீறி பேசுவது உண்டு.

யாரு கிட்ட எப்படி பேசணும்னு தெரியாம பேசிட்டயே சிதம்பரம் என அந்த ரசிகருக்கு பல ரசிகர்கள் கமெண்ட் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.