90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை யுவராணியா இது.. 45 வயதில் ஆளே மாறிய நிலை

Report
1844Shares

தமிழ் சினிமாவில் மூத்த நடிகைகள் வயது அதிகரித்ததால் படவாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள். ஆனால் ஒருசில நடிகைகள் சின்னத்திரை பக்கம் சென்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தும் வருவார்கள்.

அந்தவகையில் 90களில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை யுவராணி. “அழகன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமான யுவராணி அதனை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து அதன்பின் தளபதி விஜய்யுடன் ஜோடியாக “செந்தூரப்பாண்டி” என்ற படத்தில் நடித்தார்.

செந்தூரப்பாண்டி இந்த படத்தில் இவரும் தளபதி விஜய்யும் நிஜ காதலர் ஆகவே வாழ்ந்திருந்தனர். அந்த அளவிற்கு படத்தில் நன்றாக நடித்து இருந்தனர்.

பாட்ஷா படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த யுவராணி சமீபத்தில் “சிங்கம்3” படத்தில் சூர்யாவிற்கு அண்ணியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கார்த்தி நடித்த “கடைக்குட்டி சிங்கம்” என்ற படத்தில் கார்த்திக்கு சகோதரியாகவும் நடித்தார்.

வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் அவர் ஏகப்பட்ட சீரியலில் கமிட் ஆகி நடித்தும் வருகிறார்கள். தற்போது 45 வயதாகும் யுவராணியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்து வருகிறது.