அமலாபாலை அடுத்து ஆடையை தூக்கி எறிய தயாரான பிரபல நடிகை?.. பாலிவுட்டையே அதிரவைத்த நிலையா?.

Report
553Shares

தமிழ் சினிமாவில் திருமணம், விவாகரத்து, ஆண் நண்பர்கள், பார்ட்டி, காதல், படுமோசமான ஆடைகள் என பல சர்ச்சைகளில் சிக்கிய பேசப்பட்டு வருபவர் நடிகை அமலா பால். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தானுண்டு தமக்குண்டு என்று விமர்சனங்களை காதில் போடாமல் லாக்டவுனை கழித்து வருகிறார் அமலா பால்.

இந்நிலையில் 'மேயாத மான்' படத்தின் இயக்குனர், ரத்னகுமார் இரண்டாவதாக இயக்கி வெளியான திரைப்படம் 'ஆடை' . இந்த படத்திற்காக மிகவும் போல்டு ஆன கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருந்தார் அமலா பால்.

ஆடை திரைப்படம் பல்வேறு எதிர்ப்பு மற்றும் தடைகளுக்குப் பிறகு வெளியானது. படத்தில் அமலா பால் ஆடைஇன்றி நடித்திருக்கிறார் என்ற செய்தியே படத்திற்கு பெரும் விளம்பரமாக அமைந்தது.

அமலா பால் ஆடையின்றி நடித்ததை பலர் விமர்சன ரீதியாக கிழித்து தொங்கவிட்டனர். படம் ரிலீஸான பிறகு அது அப்படியே மாறியது.

அதற்கு காரணம் அமலா பாலின் நடிப்பும் கடின உழைப்பும் படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. படத்தை பார்த்தவர்கள் அமலா பாலை புகழ்ந்து தள்ளினர்.

இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிக்கி-2 என்ற திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகையாக உருவெடுத்த ஸ்ரத்தா கபூர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்று வருகிறார்.

தற்போது அமலா பால் நடித்த ஆடை படத்தின் ரீமேக்கில் நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்க கமிட்டாகியுள்ளார். அமலா பால் இப்படத்தில் ஆடையின்றி பாதி படங்களில் வருவதை போன்றும் ஆடைகளை துறந்து நடிக்கவுள்ள தகவல் பாலிவுட் ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.