ரகசிய காதலில் சிக்கிய தென்னிந்திய பிரபலங்கள் இவ்வளவு பேரா?.. யார் யாருடன் தொடர்பில் இருந்தாங்க தெரியுமா?

Report
701Shares

திரை பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு மத்தியில் பல சர்ச்சைகள், கிசுகிசுக்கள் பேசப்பட்டு வரும். அந்தவகையில் தென்னிந்திய சினிமாவை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குநர், தயாரிப்பாளர்கள் என பல ரகசியங்கள் மறைந்திருக்கும். அதுவும் இரகசிய காதல், சில ஊடல், கூடல்கள், நடக்கும்.

இப்படி தென்னிந்திய பிரபலங்கள் யார் யாருடன் காதலில் அதுவும் ரகசிய காதலில் இருந்தார்கள் அதுபற்றி இணையத்தில் கிசுகிசுக்கள் எப்படி இருந்தன என்று பார்ப்போம்.

ஆனால், இதுபோன்று வெளிவந்த சில செய்திகள் பிறகு புரளி என்று தெரிய வந்தாலும் கூட காலங்கள் அழிந்தாலும் அழியாது என்பது போல நிலைத்து நிற்கும்.

விஜய் - சங்கவி - சுவேதா

நடிகர் விஜய்யின் ஆரம்ப காலக்கட்ட திரைப்பட பயணத்தின் போது நடிகை சங்கவியுடன் ரசிகன், விஷ்ணு போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளார். அப்போது இவர்களுக்குள்ளும் காதல் பறவை சிறகடித்ததாக புரளிகள் இருந்தன. இதையடுத்து நடிகை சுவேதாவிடம் ரகசியமாக காதல் இருந்தது என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் ஒரு நல்ல நட்புதான் இருக்கிறது என்று கூறியுள்ளார் சுவேதா.

விஷால் - வரமட்சுமி

இன்று வரையிலும் உண்மையா, இரகசியமா, புரளியா என்பது போல உலாவி வருவது விஷால் - வரலட்சுமி காதல் கதை. இருவரும் சேர்ந்து எங்கெல்லாமும் சென்று சுற்றினார்கள். ஆனால் இது காதலா நட்பா என்று பலர் யோசிக்கத்தான் செய்தார்கள். தற்போது இவர்கள் காதலிக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகத் செய்தியாக உள்ளது.

நயன்தாரா - சிம்பு, பிரபுதேவா, விக்னேஷ் சிவன்

ஆரம்ப கால கட்டத்தில் சிம்புமீது காதல் அதன்பின் பிரிவு. இதைவிட நடன இயக்குநர் மீது காதல் திருமணம் வரை சென்று முன்னாள் காதலால் பிரிந்தனர். இத்தோல்வியால் கஷ்டப்பட்டதை அறிந்து நல்ல சந்தர்ப்பமாக மாற்றி காதலை வரவழைத்துள்ளார் விக்னேஷ் சிவன். இதுவும் திருமணத்தில் முடியுமா என்ற கேள்வி? கேள்வியாகவே உள்ளது.

சித்தார்த் - சமந்தா

கல்யாணம் என்றால் அது சமந்தாவை தான் என்று சித்தார்த் அடம்பிடித்தார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. இருவரும் காதலில் இருந்தும் உள்ளனர். ஆனால் சில காரணங்களால் இருவருக்கும் பிரிவை தேடித்தந்தது. தற்போது சமந்தா வாரிசு நடிகரை காதலித்து திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

கமல் - சிம்ரன், கெளதமி, பூஜாகுமார்

பம்மல் கே சம்மந்தம் , பஞ்ச தந்திரம் போன்ற திரைப்படங்களின் போது கமலும், சிம்ரனும் காதலிப்பதாகவும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்வார்கள் என்றும் கிசுகிசுக்கள் நாளிதழ்களில் பரவின.

இதையடுத்து கெளதமியுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பில் இருந்துள்ளனர். தன்னுடைய மகளின் எதிர்காலம் குறித்து கமலிடம் இருந்து விலகுகிறேன் என்று அதிகாரபூர்வமாக கூறியுள்ளார் கெளதமி.

கமல்ஹாசனுடன் கிசுகிசுக்கபடாத நாயகிகளே இருக்க முடியாது. எந்த படமாக அவருடன் நடிக்கும் நடிகைகளுடன் கிசுகிசுகள் பரவியது தான் மிச்சம். வயதான பிறகும் கூட தற்போது தன்னுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்த பூஜா குமார் என்பவருடன் காதலில் விழுந்ததாக வதந்திகள் பரவி உள்ளன.

ஜெய் - அஞ்சலி

எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததில் இருந்தே இவர்களுக்குள் காதல் என்று வதந்தி இருந்தது. அதற்கு ஏற்றாற்போல் இருவரும் அவ்வப்போது ஒன்றாக பொழுதைக் கழித்து வந்தனர். ஆனால் சமீப காலமாக இருவருக்குள்ளும் முட்டிக் கொண்ட செய்தி தெரியவந்துள்ளது. லாக்டவுன் என்பதால் இருவரின் ரகசியம் தெரியாமலே இருக்கிறது.

அஜீத் - ஹீரா

நடிகர் அஜித்தின் ஆரம்பகால சினிமாவில் பல நடிகைகளுடன் காதல் வதந்திகள் பரவின. பெரும்பாலும் பலரும் அறியாத கிசுகிசுக்கப்பட்ட ஜோடியாக அஜித் ஹீரா. தற்போதைய தல ரசிகர்கள் பலருக்கு கூட இது தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. இந்த ஜோடிகளை போல இன்னும் பல ஜோடிகள் புரளியாக காணப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பிரபு - குஷ்பு

திருமணமான பிரபுவுடன் கிசுகிசுக்கப்பட்ட ஒரே நாயகி குஷ்பு தான். இவர்களது ஜோடி பொருத்தமும் அட்டகாசமாக இருந்தது. ஒரு சமயத்தில் இவர்கள் நிஜமாகவே திருமணம் செய்துக் கொண்டால் கூட நன்றாக தான் இருக்கும் என்று ரசிகர்களே விரும்பினார்கள்.

எஸ்.ஜே சூர்யா - பிரியா பவானி சங்கர்

கிட்டதட்ட 50 வயதுக்கு மேலான எஸ் ஜே சூர்யா நடிகை பிரியா பவானி சங்கரிடம் காதலை கூறியதாக வதந்திகள் கிளம்பியது. ஜோடியாக நடிக்க ஆரம்பித்த முதல் படத்திலேயே கிசுகிசு உருவான நிலையில் அடுத்த படமும் இவர் தான் வேண்டும் என்று படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் பிரியா. அதற்கு காரணம் இருவரும் தொடர்ந்து மான்ஸ்டர், பொம்மை போன்ற படங்களில் நடித்து வருவது கூட இருக்கலாம்.

இலியானா - அன்ரூவ்

இஞ்சி இடுப்பழகி இலியான ஆஸ்திரேலியா புகைப்பட கலைஞர் ஒருவரை லவ்வியதாக சில கூறப்படுகிறது. இதை பற்றி பெரியதாக செய்திகள் ஊடகங்களில் வராவிட்டாலும் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டன. தற்போது பிரிந்து விட்டனர். காதல் தோல்வி என தற்போது அதை மறக்க சமுகவலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

த்ரிஷா - ராணா, சிம்பு

த்ரிஷா - ராணா, பல சினிமா விருது நிகழ்சிகளில் கூட ஜோடி சேர்ந்தும் சென்றும் வந்தவர்கள். மேடையில் கூட ராணா சென்னையில் தெரிந்த ஒரேவீடு திரிச்கா வீடுதான் என்று கூறியிருந்தார். யார் கண் பட்டதோ இருவரும் பிரிந்தனர்.

இடையில் நடிகர் சிம்புவிற்கு இவருக்கும் அப்படி இப்படி இருக்குமோ என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

பிறகு வேறொருவருடன் த்ரிஷாவிற்கு திருமணம் நிச்சயம் ஆகி டிராப் ஆனது வேறு கதை. ஒருவேளை இதுக் கூட ஓர் காரணமாக இருக்குமோ என்று சந்தேகங்கள் உலாவி வருகின்றன. தற்போது ராணா காதலித்து வந்த இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

டாப்சி - மாத்தியாஸ்

வெள்ளாவி வெச்சு வெளுத்த பேய் அழகி டாப்சி வெள்ளைக்கார துறையை தான் காதலிக்கிறார் என்ற புரளிகள் உலாவிக் கொண்டிருக்கிறது. இவர் டானிஷ் பேட்மிட்டன் விளையாட்டு வீரரை காதலிப்பதாக கூறப்பட்டது. இதை டாப்சியும் உறுதிப்படுத்தினார். ஆனால் தற்போது இருவரின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்து வருகிறது.

அனுஷ்கா - பிரபாஸ்

அனுஷ்கா - பிரபாஸ் மத்தியில் காதல் ஏற்பட்டு இருவரும் இரகசியமாக காதலித்து வருவதாக ஓரிரு வருடங்கள் முன்பு பரபரப்பாக செய்திகள் பரவின. பிறகு ஊடகங்களே அவர்கள் பிரிந்துவிட்டார்களா? என்ற கேள்வியையும் எழுப்பியது. தற்போது 40 வயதை நெருங்கியும் திருமணம் செய்யாமல் இருக்கிறார் அனுஷ்கா.