சூர்யாவுடன் 14 வயதிலேயே ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவா இது?.. அடையாளம் தெரியாமல் போன நடிகையின் தற்போதைய நிலை..

Report
2798Shares

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் படவாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு சென்று ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிடுகிறார்கள் அந்தவகையில் நடிகர் சூர்யா நடிப்பில் ஆரம்ப காலகட்டங்களில் உருவான படம் ஸ்ரீ.

இந்த படத்தில் பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தியான ஸ்ருதிகா நடித்து இருப்பார். 14 வயதிலேயே சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகினார். இப்படம் ஓரளவிற்கே வெற்றியை தந்தது.

இதையடுத்து தொடர்ந்து ஆல்பம், நள தமயந்தி போன்ற படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்தார். இவர் நடித்த தித்திக்குதே படம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் வாய்ப்புகள் குவிந்த நிலையில் திடீரென படிக்கப் போவதாக சென்று விட்டார். இவர் நடித்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறாததால் யாரும் கண்டுகொள்ளவில்லை.

படிப்பை முடித்த பிறகு பட வாய்ப்பு தேடி அலைந்தவருக்கு யாரும் படவாய்ப்புகள் கொடுக்கவில்லை. தனது 14 வயதிலேயே முன்னணி ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் அளவுக்கு உடல் அமைப்பைப் பெற்று இருந்தார்.

தற்போது 34 வயது ஆகியும் அப்படியே இருக்கும் ஸ்ருதிகா மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்து நடிக்கலாம் என நினைத்து சமுகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.