38 வருடகால சினிமாவில் மனோரமாவுக்கு வாய்ப்பு கொடுக்காத பாரதிராஜா?.. இந்த நடிகைதான் காரணமா?

Report
868Shares

தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகள் மூலம் பெரிய சாதனை படைத்தவர் இயக்குநர் பாரதிராஜா. 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் படத்தினை இயக்கி பெரிய வெற்றி மூலம் புகழ் பெற்றார்.

அப்படத்தின் சப்பானி கதாபாத்திரத்தை விட பரட்டை கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பல நடிகர்கள் நடிகைகள் பிரபலமானாலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த மனோரமா பெரிதாக பேசப்படவில்லை.

இதையடுத்து எடுக்கும் படங்களில் கூட மனோரமாவிற்கு பாரதிராஜா வாய்ப்பினை தரவில்லை. பாரதிராஜா மனோரமாவிற்கு எந்த படத்தில் கூட பயன்படுத்தப்படவில்லை.

இதற்கு காரணம் காந்திமதியின் நடிப்பு தானாம். முதல் படத்திலேயே பாரதிராஜாவின் கவனைத்தை ஈர்த்தவர் காந்திமதி. தொடர்படங்களில் காந்திமதிக்கே வாய்ப்பு கொடுத்து வந்தார் பாரதிராஜா. அக்காலகட்டதிதில் மனோரமாவின் மார்க்கெட் அதிகமாக இருந்தது.

இதேபோல் இயக்குநர் மணிரத்னம் படத்தில் கூட மனோரமாவை பயன்படுத்தவில்லை. மனோரமாவை விட காந்திமதி பெரும் நடிகை என்று பல பிரபலங்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.