ஒரு நடிகர் அல்ல பல பிரபலங்களுடன் தனிமையை பகிரவேண்டும்.. கமல்ஹாசன் பட நடிகை ஓப்பன் டாக்..

Report
603Shares

தமிழ் சினிமாவில் பிரபலங்களாக வேண்டும் என்றால் முன்னணி நடிகர்களான சிலரின் படங்களில் நடித்தாலே போதும். அப்படி நடித்தால் சினிமா வட்டாரத்தில் புகழ் பெற்று பிரபலமாகிவிடலாம். அந்தவகையில் கமலஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த ஆளவந்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பாலிவுட் வரவாக வந்து இறங்கியவர் தான் ரவீனா டாண்டன்.

இப்படத்திற்கு பிறகு ஒருசில படங்களே நடித்து பாலிவுட் பக்கம் திரும்பினார் ரவீனா. பட வாய்ப்புக்காக நடிகர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

90 காலகட்டங்களில் பாலிவுட் சினிமாவில் இளம்நடிகையாக வளம் வரும் போது, ஒரு பட வாய்ப்பை பெற வேண்டும் என்றால் அப்போது முன்னணி நடிகராக இருந்த ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் கலாச்சாரமாக இருந்தது.

பின் அவருடன் மட்டுமில்லாமல் அப்படியில்லாமல் அடுத்தடுத்து நடிக்கும் ஒவ்வொரு நடிகருடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் அந்த மாதிரி எந்த ஒரு விஷயத்திலும் நான் சிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக தொடர்ந்து பல முன்னணி நடிகைகள் குறிப்பாக பாலிவுட் சினிமாக்களில் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இருப்பதை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இதில் தமிழ் சினிமாவிலும் காணப்படுகிறது ஆனால் அதை யாரும் உடனே கூறாமல் இருப்பார்கள் என்று நடிகை அதிதி ராவ் கூறியுள்ளார்.

தற்போது ரவீனா டாண்டன் கன்னட சினிமாவில் பேன் இந்தியா படமாக உருவாகி வரும் கேஜிஎப் சாப்டர் 2 படத்தில் இந்திரா வேடத்தில் நடித்துள்ளார்.