17 வயதிலேயே அந்தமாதிரி படத்திற்கு அழைத்து சென்று ஏமாற்றியுள்ளார்கள்?.. நடிகை ஷகிலா கூறிய உண்மை..

Report
288Shares

அந்தமாதிரி படம் என்றால் தமிழ் ரசிகர்களுக்கு நியாபகம் வருவது நடிகை ஷகிலா தான். 90களில் மிகமோசமான பட நடிகையாக அறிமுகமாகி உச்சம் அடைந்தவர் ஷகிலா. சமீபத்தில் நடிகை சகிலாவின் உண்மை வாழ்க்கை வரலாறு படம் மலையாளத்தில் மிக பிரம்மாண்டமாக வெளியானது.

அதுமட்டுமல்லாமல் இதை தமிழிலும் ’ஓர் இதயத்தின் உண்மை கதை’ என்ற பெயரில் ஸ்ரீபதி பத்மநாபா என்பவர் மொழி பெயர்த்திருக்கிறார்.

அந்தப் பதிவில் ஷகிலாவை பற்றிய உண்மையான சில விஷயங்களைப் பற்றி தெளிவாக அவர் கூறியுள்ளார்.

ஷகிலாவின் முதல் திரைப்படமான ப்ளே கேர்ள்ஸ் என்ற திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவும் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது எனவும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் சினிமா உலகில்தான் என்னுடைய எதிர்கால வாழ்க்கை இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனால் இத்தனை நாட்களாக நான் கோடம்பாக்கத்தில் ஒரு சாதாராண பெண்ணாக இருந்த நான் தற்போது உலகம் சுற்றும் படுமோசமான நடிகையாக அறிமுகம் ஆகி விட்டேன்.

அதுமட்டுமில்லாமல் சினிமாவின் பதிவேட்டில் ஷகிலா என்னும் பெயர் மிகவும் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படிபட்ட வெற்றி எனக்கு கிடைக்கும் என்று நான் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் நான் நினைத்ததை விட மிக உயரத்தில் சென்றுவிட்டேன்.

நான் சினிமாவில் அறிமுகமானபோது எனக்கு வெறும் 17 வயதுதான். ஆனால் நடிப்பின் மேல் ஆர்வம் இருந்த எனக்கு உதவி கேட்க தயக்கமாக இருந்தது.

அதுமட்டுமில்லாமல் யார் காலையும் நான் பிடிக்கவில்லை. ஆனால் சினிமா உலகம் என்னை தேடி என் பின்னால் வந்தார்கள். அதுமட்டுமல்லாமல் என்னுடைய மார்க்கெட் அதிகமாக இருக்கும் பொழுது என்னை அழைத்துச் சென்று சில காட்சிகள் மட்டும் எடுத்துக் கொண்டு அதை படமாக்கி விடுவார்கள்.

நான் நடித்தது 5 நிமிடம் ஆக இருந்தாலும் அதை ஒரு ஒரு நிமிடமாக பிடித்து ஜந்து படங்களில் வெளியிட்டு பணத்தை சம்பாதிப்பார்கள் ஆனால் என்னிடம் அவர்கள் ஒரு திரைப்படத்திற்கான பணத்தை மட்டுமே கொடுப்பார்கள்.

இந்த சினிமா என்னை இப்படி மோசமாகவும் ஏமாற்றியது. எனது வாழ்க்கையில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது ஆனால் நான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என யார் காலையும் பிடிக்கவில்லை யாருடனும் என்னை பகிர்ந்து கொள்ளவும் இல்லை என்று உருக்கமாக கூறினார்.