மகளின் எதிர்காலத்திற்காக கமல்ஹாசனின் அத்தனை வருட உறவிலிருந்து விலகினாரா கெளதமி?.. இந்த காரணம் தானா?

Report
4491Shares

தமிழ் சினிமாவில் 75 படங்களுக்கு மேல் நடித்த நடிகையாக 80களில் கொடிகட்டி பறந்த நடிகை கௌதமி. தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

சந்தீப் பாத்தியா என்பவரை திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றார். சந்தீப் மூலம் பெற்ற மகள் சுப்புலட்சுமியுடன் தற்போது தனியாக வாழ்ந்தும் வருகிறார்.

இதற்கு பிறகு நடிகர் கமல்ஹாசனுடன் தொடர்பு கிடைத்து ரிலேஷன்ஷிப்பில் இருந்து படங்களில் நடித்தும் வந்தார். இதன் பிறகு கௌதமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக முழுநேரமும் கமல்ஹாசன் தான் பார்த்து கொண்டுள்ளார். படவாய்ப்புகள் கிடைக்காமல் சீரியலிலும் சில குணச்சித்திர கதாபாத்திரங்களுலும் நடித்து வருகிறார்.

தற்போது மகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அதிகாரபூர்வமாக கமல் ஹாசனிடமிருந்து பிரிந்து மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் கௌதமி.

ஆனால் இதற்கு வேறொரு காரணம் சொல்லப்படுகிறது. கமல்ஹாசனின் மகள்கள் இருவரும் நடிகையாகி பிரபலங்களாக சுற்றி வருகிறார்கள். ஆனால் கமல்ஹாசனிடம் இவ்வளவு ஆண்டுகள் இருந்தும் என் மகள் யார் என்று உலகிற்கு தெரியாமல் போனது.

இதனால் என் மகளை பெரிய நடிகையாக்க வேண்டும் என்று பல இயக்குநர்களிடம் மகளுக்கு வாய்ப்புகள் கேட்டு வருகிறாராம் கெளதமி.