நடிகை அதிதி ராவை படுக்கையை பகிர்ந்து கொள்ள சாய்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்.. வாரிசு கலாச்சாரத்தால் ஏற்பட்ட பரிதாபம்..

Report
709Shares

படவாய்ப்புகள் என்றாலே அந்த காலமுதலே காஸ்டிங் கவுச் என்ற நிலைக்கு நடிகைகள் தள்ளப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் படத்திற்காக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் படுக்கைக்கு அழைத்து அட்ஜெஸ்ட் பண்ண கூறுவார்கள்.

அந்த நிலை தற்போதைய நடிகைகளுக்கும் நடந்து கொண்டி இருக்கிறது, அதுவும் மீ டூ மூலம் பாதிக்கப்பட்டவர்கள் போல்ட்டாக கூறி வருகிறார்கள்.

அந்தவகையில் சமீபத்தில் நடிகை அதிதி ராவ் பேட்டியொன்றில் தனக்கும் அதுமாறியான பிரச்சனைகள் நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

நான் நடித்து அறிமுகமாகி சில படங்கள் கமிட்டாகிய நிலையில் வாரிசு தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் படுக்கையறை பகிர்ந்து கொள்ள வேண்டும் இல்லை சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று இரு சாய்ஸ் கொடுத்தார்.

தடுமாறி நின்றபோது வேறுவழியில்லாமல் பல மாதங்கள் சினிமாவைவிட்டு வெளியேறினேன். படவாய்ப்புகளும் வரவில்லை. இதற்கு அந்த வாரிசு தயாரிப்பாளர்தான் என்று புரிந்து கொண்டேன்.

இதையடுத்து தமிழ், தெலுங்கு என பல படங்கள் எனக்கு வந்து சேர்ந்தது என்று கூறினார். பெண்கள் தங்களின் சக்தியை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்காக அடிபணிந்து செல்லாமல், அச்ச்சப்படாமல் உங்களின் திறமையை புரிந்து கொள்ளும் நிலை ஏற்படும் வரை உறுதி கொண்டு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு காஸ்டிங் கவுச் எத்தனை திறமைமிக்க நடிகர், நடிகைகளை இழக்கபோகிறதோ? இது எப்போது முடியும் என்ற கேள்வியும் தற்போதைய இந்திய சினிமா மற்றும் உலக சினிமா ரசிகர்களின் கேள்வியாகவே உள்ளது.