நடிகர் அமிதாப் பச்சனை தொடர்ந்து அவரின் மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தோற்று உறுதி..ஐஸ்வர்யா ராய் நிலை?

Report
83Shares

இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அமிதாப் பச்சன். பாலிவுட் மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமாக இருப்பவர்.

இந்நிலையில் இவருக்கு சில நாட்களாக உடல்நலம் சரியாக இல்லை என்பதால் கொரோனா வைரஸ் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது இவருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டதை தனது சமூக வலைத்தளமான ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

மேலும் அவருடன் கடந்த 10 நாட்கள் தொடர்பில் இருந்தவர்களையும் டெஸ்ட் செய்ய அறிவுறுத்தி இருந்தார்.

இதனிடையே அவரின் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு டெஸ்ட் செய்யப்பட்டு இருந்த நிலையில், அவரின் மகன் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது தாய் ஜெயா பச்சன் இருவருக்கும் தொற்று உறுதி இல்லை என்று வந்துள்ளது. ஆனாலும் இருவரும் தங்களைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது செய்தி இந்திய அளவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.