இரண்டாம் திருமணம் மூன்று பிள்ளைகளுக்கு தாயான ஆர்யாபட நடிகை.. இந்த பாடகர் தான் கணவரா?

Report
450Shares

சினிமாவில் பல நடிகைகள் நடித்து படவாய்ப்பில்லாமல் காணாமல் போன நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகள் தான் அதிகமாக படவாய்ப்புகள் இன்றி ஒதுங்கி விடுகிறார்கள். அந்தவகையில் பாலிவுட், டோலிவுட், கோலிவுட், கன்னடம், பஞ்சாபி போன்ற மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சமீக்ஷா.

தமிழில் கார்த்திகை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்தார் சமீக்ஷா. இதைதொடர்ந்து அரிந்து அறியாமலும் என்ற படத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு சில காலம் விலகினார்.

இதையடுத்து தொலைக்காட்சி சீரியலில் நடித்தும் வருகிறார். ஏற்கனவே திருமணமாகி 10 வயது மகனுக்கு தாயாகி விவாகரத்து பெற்றார். இந்நிலையில் பாடகர் சாயில் ஆஸ்வாலுடன் காதலில் இருந்துள்ளார். தற்போது அவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். சிங்கபூரில் இருவருக்கும் திருமணம் நடந்ததாகவும், கொரானா பிரச்சனையால் குடும்பத்தினரால் பங்கு கொள்ளமுடியவில்லை என்று இணையத்தில் கூறியுள்ளார்.

இனிமேல் திரைப்படங்களில் நடிக்கபோவதில்லை என்றும் கதை திரைக்கதை தயாரிப்பு என்று அதில் கவனம் செலுத்த போகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். சாயில் ஆஸ்வாலும் ஏற்கனவே திருமணமாகி வயதிற்கு வந்த மகளும், மகனும் இருக்கிறார். தற்போது முதல் மனைவியை விவாகரத்து செய்து நடிகை சமீக்ஷாவை இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.