நடிகை ஜோதிகாவின் வெளிநாட்டு காதலனாக நடித்த நடிகரா இது?.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்

Report
2881Shares

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகை ஜோதிகா. இவர் நடித்து வெளியான படங்கள் பெரும்பாலும் வெற்றியை பெற்றதாகவே இருக்கும். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்த நிலையில் சில குணச்சித்திர வேடங்களிலும் தற்போது நடித்தும் வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு ரீஎண்ட்ரி கொடுத்து பல படங்களில் நடித்து வரும் ஜோதிகா சமீபத்தில் சில சர்ச்சையிலும் சிக்கி வருகிறார்.

இந்நிலையில் 2001ல் இவரும் ஹாலிவுட் நடிகர் பெண்ட்லே மிட்சன் என்பரும் இணைந்து நடித்த படம்தான் லிட்டில் ஜான். பேண்டசி திரில்லர் கலந்த படமாக மந்திரம் சம்பந்தபட்ட படமாக எடுக்கப்பட்டது.

இப்படம் வெளியாக சிறுவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றது. தற்போது இப்படம் வெளியாக 19 வருடங்கள் ஆன நிலையில் இப்படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் பெண்ட்லே வேறு எந்த தமிழ் படங்களிலும் நடிக்காமல் ஹாலிவுட் பக்கமே திரும்பினார்.

தற்போது அவருக்கு 53 வயதான நிலையில் ஆள் அடையாளம் தெரியாமல் வயதானவர் தோற்றத்தில் இருக்கிறார். நடிப்பு தவிர்த்து இசையில் ஆர்வம் கொண்டு இசையமைப்பாளராகவும் தற்போது பணியாற்றி வருகிறார். இவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.