காட்டில் நள்ளிரவில் தலஅஜித் காரில் சென்ற நயன்தாரா.. படப்பிடிப்பில் என்ன நடந்தது?

Report
2020Shares

தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் ரஜினி, கமல் போன்றவர்களுக்கு அடுத்ததாக இருப்பவரில் ஒருவர் நடிகர் தல அஜித். சமீபத்தில் இவர் நடித்த விசுவாசம், நேர்கொண்ட பார்வை பெரும் வரவேற்பு பெற்று நல்ல விமர்சனத்தையும் பெற்றது.

இதையடுத்து தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் வினோத் அவர்கள் இயக்கி வருகிறார். பாலிவுட்டின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான போனிகபூர் தயாரிப்பு நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.

போனிகபூர் நடிகை ஸ்ரீதேவி மகளான ஜான்வி கபூர் முக்கிய கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். கொரானா ஊரடங்கு காரணத்தால் தற்போது படப்பிடிப்புகள் ஏதும் நடக்கவில்லை. இப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமூக வலைதளத்தில் இரவோடு இரவாக அஜித் காரில் லேடி ஸ்டார் நயன்தாரா சென்றுள்ளார் இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

நடிகை நயன்தாரா சமீபத்தில் வெளியான விசுவாசம் என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் படப்பிடிப்பின் போது ஏற்காட்டில் இருந்துள்ளார். அப்பொழுது சத்தியம் திரைப்படத்தின் ஒரு முக்கியமான காட்சி எடுப்பதற்காக சென்னை வருவதாக இருந்துள்ளது.

அந்நேரத்தில் உதவிக்காக தல அஜித் தன்னுடைய காரில் செல்லுங்கள் என கூறியுள்ளார். இதை ஏற்று நடிகை நயன்தாரா தனியாக புறப்பட தயாரானார். இதையறிந்து நடிகர் அஜித் பாதுகாப்பிற்காக தனது டிரைவரையும் அனுப்பி வைத்துள்ளார். இதன்மூலம் நடிகர் அஜித் எப்படிபட்டவர் என்று புரிந்திருக்கும்.