நடிகர் கார்த்திக்கு ரீல் மகளாக நடித்த குழந்தையா இது?.. இவ்வளவு பெரியவளாக வளர்ந்துட்டாங்க!

Report
1027Shares

சினிமாத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் சினிமாவில் பிரபலமாகி முன்னணி நடிகையாக வலம் வருவது தற்போது சாதாரணமாகிவிட்டது.

அந்த வகையில் சமீபத்தில் பிரபலமானவர்கள் மத்தியில் குட்டி அனிகாவை தொடர்ந்து நடிகர் கார்த்திக், தமன்னா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சிறுத்தை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ரக்ஷனா. இவர் தனது ஜந்து வயதில் 2011-ல் வெளிவந்த சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்திருப்பார்.

சிறுத்தை படத்தை இயக்கியதால் சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டவர் இயக்குநர் சிவா. இப்படத்திற்கு பின் பேபி ரக்ஷனா ஜெயம் ரவி, சரத்குமார், அமலாபால், துல்கர் சல்மான், விஷால் போன்ற பிரபலங்களுடன் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளிவந்த ஓகே கண்மணி, பாண்டிய நாடு, கடல், த்ரிஷா இல்லனா நயன்தாரா நிமிர்ந்து நில் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் என்றே கூறலாம்.

சமீபத்தில் நடந்த அழகு போட்டியில் ஒன்று கலந்துகொண்டு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவளைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.