திருமணம் செய்த கணவரே துரத்திவிட்ட கொடுமை!..சொத்திற்காக வீட்டில் அடைந்துகிடக்கும் நடிகை.. இதுதான் காரணமா?

Report
1429Shares

தமிழ், மலையாளன், தெலுங்கு என 80களில் கொடிகட்டி பறந்த நடிகைகளுல் ஒருவர் கனகா. பழம்பெரும் நடிகை தேவிகா என்பவரின் மகள் நடிகை கனகா. வாரிசு நடிகையாக வெற்றிபடமான ‘கரகாட்டக்காரன்’படத்தில் நடிகர் ராம்ராஜனுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.

இதையடுத்து பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை கனகா சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதாக வதந்திகள் பரவ ஆரம்பித்தது.

இதையறிந்ததும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.

பழம்பெரும் நடிகை தேவிகா பல படங்களில் நடித்து பிரபலமானவர். அவர் நடித்து தாம் சம்பாதித்த ஏராளமான சொத்துக்களுக்கும் ஒரே வாரிசு கனகா மட்டும்தான் என்று கூறியிருந்துள்ளார். இதனால் அம்மாவின் சொத்துக்களை யாருக்கும் கொடுக்காமல் காத்து வருகிறாராம்.

இந்நிலையில் கனகாவிற்கு சில ஆண்டுகளாக புற்றுநோய் இருந்து அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்து வந்துள்ளார்.

இதனால் திருமணம் செய்த கணவரே தனக்கு யார் என்று தெரியாது என துரத்தி அனுப்பி விட்டுவிட்டாராம்.

மேலும் தனது அம்மாவின் சொத்துக்காக தனது தந்தையே தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறி அவரையும் ஒதுக்கியும் உள்ளார். தற்போது கனகா தனது அம்மாவின் பங்களா ஒன்றில் தான் வசித்து வருகிறார்.

தன்னுடைய அம்மாவின் சொத்து யாருக்கும் கிடையாது என்று சுமார் ஏழு ஆண்டுகளாக வீட்டில் உள் தாப்பாள் போட்டுக்கொண்டு வாழ்ந்து வருகிறார்.

தற்போது உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது அங்கு வேலை செய்யும் சிலருக்கு மட்டும்தான் தெரியும். ஒரு பிரபலமான நடிகை சொத்துக்காக இவ்வளவு இறங்கி நடந்து கொள்ளலாமா? என பலரும் அவர்மீது அதிருப்தியில் உள்ளார்களாம்.