நீச்சல் குளத்தில் கட்டிப்பிடித்தபடி புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி.. மீண்டும் மீண்டும் வெறுப்பேற்றும் ரசிகர்கள்!

Report
715Shares

பிரபல தொலைக்காட்சியின் மூலம் பிரபல தொகுப்பாளினி இடத்தினை பெற்றவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் டிடி இவருக்கென்று ஒரு ஸ்டைலில் நடத்தி வருகிறார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமாகி வரும் டிடி தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். சில விளம்பரப்படங்களில் அம்பாஸ்டராகவும் இருந்து வருகிறார்.

கடந்த 2014ல் ஸ்ரீகாந்த் ரவிசந்திரன் என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதற்கான காரணம் தனிப்பட்ட முடிவுதான் என்று கூறினார் டிடி. ஆனால் விவாகரத்துக்கு காரணம் நட்பு, லேட் நைட் பார்ட்டி, மதுப்பழக்கம் என்று கிசுகிசுக்கப்பட்டது.

அதே நேரத்தில் நடிகர்கள் சிலருடனும் அவர் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியானது.

இதனால் டிடியை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நீச்சல் குளத்தில் பிகினி ஆடையில் ஒருவருடன் கட்டியணைத்தபடி புகைப்படத்தை டிடி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் அந்த இளைஞரை லக்கி பாய் என கூறியிருப்பதோடு, விவாகரத்துதான் ஆகிவிட்டதே இனிமேல் இஷ்டப்பட்டவர்களுடன் சுத்தவேண்டியதுதான் என விமர்சித்து கருத்துகளை கூறி வந்தனர்.

ஆனால், உண்மையில் டிடி பிகினியில் போட்டோ எடுத்திருக்கும் இளைஞர் அவருடைய சகோதரர் சுதர்ஷன் நீலகண்டன். அதனையும் டிடி அந்த போட்டோவில் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து மீண்டும் சில மோசமான புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார் டிடி. அந்த புகைப்படங்களை பதிவிட்டு கலாய்த்தும் வருகிறார்கள்.