அம்மாவையே உறித்து வைத்திருக்கும் அழகில் தேவயாணி மகளா இது?..புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிலர்கள்..

Report
845Shares

தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை தேவயானி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகையாக இருந்தவர்.

தனது தனித்துவமான நடிப்பாலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களாலும் மக்கள் மனதை பிடித்தவர். இவர் விஜய், அஜித், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார்.

தல அஜித்தாக இருந்த காலம் வருவதற்கு முன் காதல் மன்னன் அஜித்தின் தொடரும் உள்பட பல படங்களில் நடித்தவர் தேவயானி. அதேபோல் விஜயுடனும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

திரைத்துறையில் உச்சத்தில் இருந்த தேவயானி கடந்த 2001ம் ஆண்டு தன்னை வைத்து படம் இயக்கிய இயக்குநர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பின்னர் சின்னத்திரையில் அறிமுகமாகி நடிக்க ஆரம்பித்தார். படவாய்ப்புகள் வயதானதால் கிடைக்காமல் போனது. இதையடுத்து கோலங்கள் என்ற சீரியலிலும் நடித்து வந்தார். தற்போது தேவயானி சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி செய்தும் வருகிறார்.

ஆசிரியப்பணிக்குப் போன தேவயானி குடும்பத்தை கவனிப்பதில் ஆர்வம் கொண்டு சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்கிறார்.

ராஜகுமாரனுக்கும் தேவயானிக்கும் இனியா, பிரியங்கா என இருமகள்கள் உள்ளனர். இவர்களோடு தேவயானி இருக்கும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒருமகள் அச்சுஅசலாக தேவயானி போலவே இருக்கிறார்.