என் ஆட்டத்தை ஆடவிடாமல் தடுத்த தோனி.. பின் நடந்தது வேறு? ..ரொம்ப நாள் ரகசியத்தை உடைத்த ரோஹித்..

Report
29Shares

கொரானா லாக்டவுனால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், அனைத்துவித விளையாட்டுகளுக்கும் தடை பிரப்பித்துள்ளார்கள். அதில் கிரிக்கெட் விளையாட்டும் ஒதுக்கி வைத்துள்ளார்கள். மார்ச் மாதம் நடக்கவிருந்த ஐபிஎல் லீக்கும் தள்ளி வரும் மழைக்காலம் முடிந்தபின் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அனைத்து விளையாட்டு வீரர்கள் பலரும், தங்களுடைய இன்ஸ்டாகிராமில் சக வீரர்களுடன் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுடன், துவக்க வீரர் ரோகித் சர்மா சமீபத்தில் தன்னுடைய அனுபவங்கள் பற்றி தெரிவித்து வருகிறார். அப்போது, கடந்த 2013-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தது குறித்து நினைவு கூர்ந்தார்.

அந்த ஆட்டம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாள். ஷிகார் தவான், கோஹ்லி, யுவராஜ் சீக்கரமே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அந்த ஆட்டத்தில் ரொம்ப நேரம் இருந்து இரட்டை சதம் அடித்தேன்.

பின்பு தொடக்க வீரரான நானும் சுரேஷ் ரெய்னாவும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தோம். ரெய்னா ஆட்டமிழந்ததும் டோனி வந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினோம்.

அப்போது டோனி என்னிடம் வந்து, அடிக்கடி வந்து நீ ஆரம்பத்தில் இருந்து விளையாடி வருகிறாய் அதனால் கடைசி வரை இருக்க வேண்டும். உன்னால் எந்த பந்தையும் விளாச முடியும், நீ நிலைத்து நின்று ஆட வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

மேலும், நான் அடித்து ஆடும் பொறுப்பை எடுத்து கொள்கிறேன் என்று கூறினார். ஆனால் நானோ அவர் பேச்சை கேட்காமல், கிடைத்த பந்துகளை எல்லாம் அடித்தேன்.

அவர் சொன்னது போன்றே கடைசி வரை ஆட முடியாமல் 48-வது ஒவரிலே பெவிலியன் திரும்பினேன் என்று கூறி பல ஆண்டுகள் மனதில் வைத்திருந்ததை கூறியுள்ளார்.