சூர்யா-ஜோதிகா காதலை எதிர்த்தாரா சிவக்குமார்?.. 4 ஆண்டுகளாக கஷ்டப்பட்ட ஜோடி.. உண்மையை உடைத்த தந்தை..

Report
533Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக 80,90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர் சிவகுமார். முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து பல விருதுகளை பெற்றவர். இவருக்கு அடுத்து இவர்களது மகன்களான சூர்யாவும் கார்த்தியும் சினிமா வட்டாரத்தில் முன்னணி நடிகர்கள் என்ற அந்தஷ்த்தை பெற்று வருகிறார்கள்.

நடிகர் சூர்யா நேருக்கு நேர் படத்தில் இயக்குநர் வசந்த் இயக்கத்தில் அறிமுகமானார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். கடந்த 2006ல் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு குழந்தைகள் பெற்றெடுத்தனர்.

இந்நிலையில் இவரது தந்தை சிவகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சூர்யா-ஜோதிகாவின் திருமணத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.

`சூர்யா விருப்பம் இல்லாமல் சினிமாத்துறைக்கு வந்தான். அதைமீறி என்னைவிட அதிக சம்பளமும் விருதினையும் பெற்றான்.

150 படங்களில் அவ்வளவு காதல் கதையை பார்த்த நான் அவர்கள் காதலுக்கு சம்மதித்தேன். இதைமீறி நான் எதிர்த்தால் நாங்கள் திருமணம் செய்யாமலே இருப்போம் என்றான் சூர்யா. இதற்காக அவர்கள் 4 ஆண்டுகள் காத்திருந்தார்கள்.

இதெல்லாம் நான் ஜோதிடர் ஒருவர் முன்பே இதுபற்றி கூறியிருந்தார். அவரை தேடி நான் வேட்டிசட்டை எடுத்து கொடுத்தேன் அந்த ஜோதிடருக்கு என்று கூறினார்.