கணவரை அசிங்கப்படுத்தி வீடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா.. திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

Report
954Shares

இளம்நடிகைகள் சினிமாவில் பெரிய இடத்தினை பிடிக்கவேண்டும் என்று அறிமுகமாகி நடிப்பார்கள். அந்தவகையில் அறிமுகமான நடிகைகள் ஒருசில படங்களிலேயே காணாமல் போய் விடுகிறார்கள்.

அந்தவகையில் இருந்தவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் படமான சிவாஜி, நடிகர் விஜய் நடித்த படமான அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதற்கு முன் சிறு கதாபாத்திரங்களில் சிறிய படஜெட் படங்களில் நடித்துள்ளார். பெரிய நடிகர்களுடன் நடித்தாலும் அதன்பின் படவாய்ப்புகள் கிடைக்காமல் தள்ளாடினார். மேலும் அவர் திருமணம் செய்யாமலே காதலருடன் சேர்ந்து வாழ்ந்து வதந்திகளுக்கு ஆளானார்.

கடந்த 2018ல் ஆண்ட்ரீ கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்தார். அதன்பின் எங்கு சென்றாலும் பொது இடத்திலேயே லிப்டுலிப் கிஸ் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினர். அதுமட்டுமில்லாமல் சமுகவலைத்தளத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் 144 தடை ஊரடங்கால் தன் கணவருடன் இருந்து வருகிறார். தன் கணவர் பாத்திரம் கழுவும் வீடியோவை வெளியிட்டு இவரை இதற்காகத்தான் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறி பதிவிட்டுள்ளார்.