அப்படிபட்ட விளம்பரத்தில் நான் நடிக்கவே இல்லை.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான பாகுபலி நடிகை..

Report
69Shares

சினிமாவில் தற்போது பெரிய பங்கினை ஆற்றிவரும்வது சமுகவலைத்தளம். ஆனால் அதுவே சில சமயங்களில் சினிமாவிற்கு பகையாக இருக்கிறது. சமுகவலைத்தளத்தில் சினிமாவில் நடிக்கும் அனைத்து நடிகைகளும் இணையதளத்தில் இருக்கும் பல பக்கங்களில் கணக்குகளை வைத்திருப்பார்கள். ஆனால் சிலர் நடிகைகளின் பெயரில் போலி கணக்குகளை வைத்திருப்பார்கள்.

அந்தவகையில் தற்போது பாதிக்கப்பட்டிருப்பவர் பாகுபலி படத்தில் நடித்த அஸ்ரிதா வெமுகாந்தி. பாகுபலி 2 பாகத்தில் நடிகை அனுஷ்காவின் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அஸ்ரிதா. இவர் இப்படத்தில் நடிப்பதற்கு முன் நடன கலைஞராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் சமுகவலைத்தளமான ஃபேஸ்புக் பக்கத்தில் டேட்டிங் தளம் ஒன்றில் விளம்பரத்தில் நடித்தது போன்று அப்பக்கத்தில் நடிகை அஸ்ரிதாவின் புகைப்படம் இருந்துள்ளது. சிலர் இவரின் புகைப்படத்தை அனுமதியில்லாமல் தவறாக பயன்படுத்தியுள்ளனர் டேட்டிங் தளத்தில்.

இதை பார்த்த நடிகை அஸ்ரிதா நான் அப்படிபட்ட விளம்பரத்தில் நடிக்கவில்லை என் பெயரை அசிங்கப்படுத்துவதற்காக சிலர் இப்படி செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் இதுபற்றி சைபர் கிரைம் போலிசாரின் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார் நடிகை அஸ்ரிதா வெமுகாந்தி.