இரண்டாம் திருமணம் செய்ய தயாரான பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்..

Report
635Shares

சினிமாத்துறையில் பிரபலங்கள் திருமணங்கள் பெரியளவில் பேசப்பட்டு வரும். அந்தவகையில் பேசப்பட்டு வருபவர் தான் விஷ்னு விஷால். தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷ்னு. அப்ப்படத்தின் மூலம் பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

சிறிய பட்ஜெட் படங்களே கிடைத்த நிலையில் இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற படங்கள் இவரின் சினிமா காலத்தில் பெரியளவில் பேசப்பட்டு வெற்றிப்பெற்ற படங்களாகும். இந்நிலையில் கடந்த 2011ல் ஆடை வடிவமைப்பாளரான ரஜினி நட்ராஜ் என்பவரை திருமணம் செய்தார்.

இருவருக்கும் ஆர்யன் என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். சில ஆண்டுகளாகவே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளால் சண்டைகள் வந்துள்ளனர். இதனால் க்டந்த 2017ல் இருவரின் சம்மதத்துடன் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனால் சினிமாத்துறையே அதிர்ச்சியானது. அதன்பின் ராட்சசன் படத்தின் நடித்ததன் மூலம்நடிகை அமலாபாலைத்தான் இரண்டாம் திருமணம் செய்யப் போகிறார் என்ற கிசுகிசுக்களும் வந்தன

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் சேர்ந்து நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், இவருக்காகத்தான் மனைவியை விவாகரத்து செய்தீர்களா? என்ற கேள்வியையும் கேட்டு வந்தனர்.

இதையடுத்து, விஷ்னுவிற்கும் ஜுவாலாவிற்கு கடந்த மார்ச் 28ல் திருமணம் நடைபெறப்போகுவதாக செய்தி வெளியானது. கொரானா வைரஸ் தடுப்பால் 144 தடை ஊரடங்கால் விஷ்னுவின் இரண்டாம் திருமணம் தள்ளி வைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

கொரானா வைரஸால் இருவரும் தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதால் ஜுவாலா வருங்கால கணவர் விஷ்னுவை மிஸ் செய்வதாக அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.