நடிக்கவரும் முன் லேடி சூப்பர் ஸ்டாரின் நிலை இதுதானா?.. வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்...

Report
2156Shares

சினிமாத்துறையில் பிரபலனாவது சில ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் நடிகையாகுவது என்றாலே பெரிய போராட்டமாக இருக்கும். அப்படியும் படவாய்ப்பு கிடைத்தால் அதை பயன்படுத்தி அனைவரையும் கவர்ந்தால் மட்டுமே அடுத்த படத்தில் வாய்ப்பு. அந்தவகையில் பயன்படுத்தி கொண்டவர் தான் நடிகை நயன்தாரா.

மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானாலும், தமிழ் சினிமாவில் ஐய்யா படத்தின் மூலமும், சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகி படத்தின் மூலம் தான் நயன்தாராவிற்கு திரைத்துறையில் நல்ல மதிப்பை பெற்றுத்தந்தது.

அதைதொடர்ந்து சிலபடங்களில் சிறு கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருகிறார்.

தற்போது 35 வயதாகும் நயன் தாராவிற்கு எப்போது திருமணம் என்று கேள்விகள் கேட்டாலும், இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் என்பது தான் உண்மை. எங்கு சென்றாலும் ஜோடியாகத்தால் செல்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா சினிமாத்துறைக்கு வரும் முன் இந்த பணியை தான் செய்திருந்தார் என்று ஒரு வீடியோ பரவி வருகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். டோலிவுட் லேட்டஸ்ட் நியூஸ் என்ற நிகழ்ச்சியை மலையாள மொழியில் தொகுத்து வழங்கியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி நம்ம நயன்தாரா தொகுப்பாளினியா? என்று கூறி வருகிறார்கள்.