பிரபல நடிகருடன் மலை உச்சியில் நடிகை ஷெரின் செய்த செயல்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
1042Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் படத்தில் நடித்தால் போதும் பிரபலமாகிவிடலாம் அந்தவகையில் பிரபலமானவர் தான் நடிகை ஷெரின். 2002ல் இயக்குநர் செல்வராகவன் இயக்கி அவரது தம்பி தனுஷ் நடிப்பில் துள்ளுவதோ இளமை பட்த்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் ஷெரின்.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து கமிட்டாகி வந்தார். ஆனால் அவர் நடித்த படங்கள் பெரிதளவில் ஓடாமல் இருந்தது. பின் கன்னடம், மலையாளம் ஆகிய படங்களில் நடித்து வந்தார். அதன்பின் மும்மையில் செட்டிலாகிவிட்டார்.

கடந்த ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு ரீஎண்ட்ரீ கொடுத்தார். அவரது கியூட்டான செயல்களால் ரசிகர்களை கவர்ந்தார்.

கொரானா வைரஸால் எல்லோரும் வீட்டிலேயே அடங்கியிருக்கும் நிலையில் பழைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் இன்னொரு படத்தில் தனுஷுடன் நடியுங்கள் என்று கூறி வருகிறார்கள்.